அதிகாலையில் அலறிய தஞ்சாவூர்.. கேரளாவிலிருந்து வந்த பஸ்! துடிதுடிக்க பலியான 2 பேர்.. போராடும் 40 பேர்
தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த கேரள பேருந்து, ஒரத்தநாடு அருகே விபத்துக்கு உள்ளது. வேகமாக வந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டு உள்ளது. வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்க்க இந்த பேருந்தில் பயணிகள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிகாலையில் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே சாலை ஓரத்தில் வேகத்தில் சரிந்து விழுந்துள்ளது.
அதிகாலையில் டிரைவர் உறங்கிய காரணத்தால் இப்படி விபத்து ஏற்பட்டதா என்றும் விசாரணை செய்யப்பட்டு . இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியான இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
படுகாயம் அடைந்தவர்களை அந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications