Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பதிவேட்டில் இனாம் கிராமம்.. தனிநபர் பெயரில் பட்டா, பூர்வீக நிலம்! தஞ்சையில் பிரம்மாண்ட மோசடி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் இனாம் ஒழிப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படாததை சாதகமாக்கி தனிநபர் ஆக்கிரமிப்புகளால் விவசாயிகளின் நில உரிமை பறிக்கப்படும் அவலம் நீடிக்கிறது.. சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுவதால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாய பூமியாகும்.. அரசின் வருவாய் ஆவணங்களில் இந்த கிராமம் மிகத் தெளிவாக "இனாம் கிராமம்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது..

Inam Village Land Government Thanjavur Nattanikkottai Village

இனாம் எஸ்டேட் ஒழிப்பு

சுதந்திரத்திற்கு பிறகு நில சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இனாம் எஸ்டேட் ஒழிப்பு மற்றும் ரையத்துவாரி மாற்றச் சட்டம் 1963 கொண்டு வரப்பட்டது..

இந்த சட்டத்தின் நோக்கம் நிலத்தை உழுபவருக்கே அதன் உரிமை சென்றடைய வேண்டும் என்பதாகும்.. ஆனால் நாட்டாணிக்கோட்டை கிராமத்தைப் பொறுத்தவரை இந்தச் சட்டம் இன்றுவரை காகித அளவில் மட்டுமே இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வரவில்லை.. இந்த நிர்வாக குறைபாட்டையே ஒரு குடும்பம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த கிராமத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது..

கிராம நிலங்கள் பட்டா

குறிப்பிட்ட ஒரு செல்வாக்கு மிக்க குடும்பம் இந்த ஒட்டுமொத்த கிராம நிலங்களையும் தங்களது சொந்த எஸ்டேட் நிலம் என்று தவறான தகவல்களை கூறி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தங்கள் பெயரில் பட்டா மாற்றிக் கொண்டுள்ளனர்.. இது பல தசாப்தங்களாக அந்த மண்ணில் வியர்வை சிந்தி உழைக்கும் அப்பாவி விவசாயிகளின் முதுகில் குத்தும் செயலாகும்..

கடந்த சில மாதங்களாக இந்த நில அபகரிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. குறிப்பாக 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே பல்வேறு பத்திரப் பதிவுகள் மூலம் இந்த இனாம் நிலங்கள் வெளிநபர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன.. பரம்பரை பரம்பரையாக அந்த நிலத்தில் குடியிருந்து வரும் மக்களும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும் தற்போது தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்படும் அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர்..

தற்போது நிலத்தை வாங்கியுள்ள வெளிநபர்கள் அந்தப் பகுதிக்குள் புகுந்து விவசாயிகளைக் காலி செய்ய சொல்லி மிரட்டல் விடுத்து வருகின்றனர்..

பூர்வீக சொத்துக்கள்

3 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வீடுகளும் உழுது வரும் வயல்களும் பறிபோகும் நிலையில் உள்ளதால் கிராமமே மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளது..

இந்த அத்துமீறல்கள் காரணமாக கிராமத்தில் நிலவி வந்த சமூக அமைதி குலைந்து சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.. இது ஒரு தனிப்பட்ட நிலத் தகராறு அல்ல மாறாக ஒரு சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி நடத்தப்படும் மிகப் பெரிய நில மோசடியாகும்.. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது..

தஞ்சாவூர் நில மோசடி

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2025 அக்டோபர் 16ம் தேதி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினர்..

இந்த நில மோசடியை தடுத்து நிறுத்தி தங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இன்னும் அதிகாரிகளின் காதுகளை எட்டியதாகத் தெரியவில்லை.. நிர்வாக ரீதியான எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இந்த எளிய விவசாய மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்..

இனாம் ஒழிப்புச் சட்டம்

உழைக்கும் மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது.. இனாம் ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி அந்த ஒரு குடும்பத்தின் பெயரில் உள்ள போலிப் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. நில மாற்றங்களை முடக்கி வைத்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்..

அதிகார வர்க்கமும் அரசியல் அமைப்பும் ஒன்றிணைந்து இந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் ஒரு கிராமமே ஜனநாயகப் பாதையிலிருந்து விலகும் சூழல் ஏற்படும்.. நாட்டாணிக்கோட்டை கிராம மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டியது சமூக நீதியின் கடமையாகும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+