ரயிலில் 3 அடுக்கு AC பெட்டி.. தஞ்சாவூர், சென்னை மக்களே ரெடி? ரயில்வே தந்த கார்த்திகை தீபம் சர்ப்ரைஸ்
தஞ்சாவூர்: இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்... அதனால்தான், சிறப்பு மிக்க கோவில்களுக்கு, மன அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வேண்டி, மூத்த குடிமக்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள்..

கட்டணம்: அதேபோல, தங்களுடைய இறுதி காலத்தில் ஆன்மீக யாத்திரை செல்லவும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. இவர்களுக்ககவே, கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அவ்வப்போது அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது.
கடந்த புரட்டாசி மாதத்தில்கூட இப்படியொரு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தது.. வைணவ கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதம் இது என்பதால் , சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு, 60 முதல் 70 வயதிற்குட்பட்ட 100 பக்தர்களை அழைத்து சென்றிருந்தது. இது வயது முதிர்ந்த நபர்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்திருந்தது .
கும்பகோணம்: இந்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஐஆர்சிடிசி மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசும்போது சொன்னதாவது:
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் டிசம்பர் 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
3 வேளை உணவு: இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications