தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.. தமிழகத்தில் முதல்முறையாக பாத மருத்துவ மையம் அறிமுகம்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தமிழகத்தில் முதல்முறையாக, நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலே கண்டறியும் பாத மருத்துவ மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பெரும்பாலும் வயதானவர்களுக்கு, நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இல்லை என்றாலே பெரிய ஆச்சரியம்தான். அதிலும், நீரழிவு நோய் என்பது, சர்க்கரை இன்சுலின் அளவுடன் நின்றுவிடாமல், அது நரம்புகளையும், இரத்த ஓட்டத்தையும் சேர்த்தே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகள், பாதத்திற்கும், சமருமத்திற்கும் கடும் சேதத்தையும் உண்டு பண்ணுகிறது. எனினும், முறையாக சிகிச்சை மேற்கொண்டால் இந்தப் பாதிப்பை தவிர்க்கலாம்.

Introduction of podiatry centre for early diagnosis of diabetes in Tamil Nadu

இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக, நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலே கண்டறியும் பாத மருத்துவ மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கோபம்.. காய்ச்சல் முகாமிலிருந்து விறுவிறுவென வெளியேறிய மா. சுப்பிரமணியன்.. மருத்துவர்கள் அதிர்ச்சி கோபம்.. காய்ச்சல் முகாமிலிருந்து விறுவிறுவென வெளியேறிய மா. சுப்பிரமணியன்.. மருத்துவர்கள் அதிர்ச்சி

தஞ்சை மாவட்டத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.43 கோடி செலவில் 3 மருத்துவ உபகரணங்கள் மற்றும், 1 சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, 2 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் ஆகியவை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.

Introduction of podiatry centre for early diagnosis of diabetes in Tamil Nadu

மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு தங்கப்பதக்கமும் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, தாய்மார்களின் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் அதிநவீன கருவி ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் செலவில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு குருதி நாள பாதிப்புகளால் ஏற்படும் கால் பாதிப்புகளை கண்டறிந்து, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் கால் அகற்றப்படக்கூடிய நிலை ஏற்படாது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் பாத மருத்துவ மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Introduction of podiatry centre for early diagnosis of diabetes in Tamil Nadu

மேலும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, தீவிர சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, புதிய ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவையும் இம் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி.செழியன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட எம்எல்ஏக்களும், மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

English summary
For the first time in Tamil Nadu, Health Minister Ma Subramanian inaugurates a podiatry centre in for early detection of diabetes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X