பிரதமர், ஆளுநரை சீண்டுறீங்க.. இது பொறுப்பான அரசுக்கு அழகா.. ஆவேசமான அண்ணாமலை
தஞ்சாவூர்: பாரதப் பிரதமரையும் தமிழக ஆளுநரையும் முறையில்லாமல் சீண்டுவது பொறுப்பான அரசுக்கு அழகல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவி்த்தார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதாகவும், திமுக அரசு மீது மக்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, தறி நெய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை.

அண்ணாமலை
தஞ்சாவூர் பிரசாரத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது, ''தமிழக மக்களிடையே பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனால், திமுக அரசு மீது சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய புதிய திட்டத்தை கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இந்த தேர்தலுக்காக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து வருகின்றனர். இதைமீண்டும் தோண்டி, எந்த அரசாணையும் இல்லாமல வீடுவீடாக எடுத்து செல்கின்றனர். வழங்கும் திட்டத்தைக் கூறி வருகின்றனர்.

ஏமாற்று வேலை
தேர்தலுக்கு முன் பெண்களுக்கு மாதாமாதம் கொடுக்கும் பணம் குறித்து இதுவரை பேசாதவர்கள்,இப்போது பேசுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் தேர்தல். இது திமுகவின் ஏமாற்று வேலை. இது மக்களுக்கு நன்றாகவே புரியும். மக்களின் கோபம் அவர்கள் மீது திரும்பிவிட்டது என்பது தெரிய வருகிறது. ஒரு பொய்யை மறைப்பதற்காக இன்னொரு பொய்யைப் பேசுகின்றனர். ஆனால், இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள்.

வாக்குறுதிகள்
திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறிய 517 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை, எனவே கனவில் கூட நீங்கள் திமுகவுக்கு வாக்களித்து விட வேண்டாம். அவர்களால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. மத்திய அரசின் சாதனைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளோம். திட்டப் பயனாளிகள் எல்லா வீடுகளிலும் இருப்பதால், பாஜகவுக்கு எழுச்சி இருக்கிறது.

சீண்டுகிறார்கள்
தமிழக ஆளுநர் மற்றும் பாரதப் பிரதமரை சீண்டுவது போன்றவை பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல. வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர் மீது எங்கேயும் துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை, திமுக ஆட்சிக்கு வந்ததும் இது நடக்கிறது என்பதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டாம். இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோம'' என்றார் செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications