11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தாக்கியதில் +2 மாணவன் பரிதாப பலி.. கும்பகோணம் அருகே அதிர்ச்சி!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் தொடர்புடைய 15 மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்கனவே காவல் நிலையம் வரை சென்றது. இந்தச் சூழலில் பள்ளி முடிந்து திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவனை 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டையால் அடித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 11ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாணவரின் பெற்றோர், மாணவரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
னால், மாணவர்கள் மைனர் என்பதால் இருவரது பெற்றோரையும் வரவழைத்து சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இரு மாணவர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மீண்டும் இரண்டு மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் (டிசம்பர் 4) வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் 10க்கும் மேற்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே காத்திருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடிந்து 12 ஆம் வகுப்பு மாணவர் கோயில் அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள், கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில், மாணவர் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பெற்றோர் மாணவரை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை தாக்கிய 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, தஞ்சாவூரில் உள்ள இளஞ்சிறார் நீதிகுழும நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர்.
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications