வெளிநாடுகளிலிருந்து குவிந்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட பெரிய கோவில்.. தஞ்சையில் கண்கொள்ளா காட்சி!
Recommended Video
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று நடக்கும் குடமுழுக்கு விழாவை காண இன்று பல லட்சம் மக்கள் வந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில், சோழ மன்னன் ராஜராஜ சோழன் மூலம் கட்டப்பட்டது . தஞ்சை பெரிய கோவில் விமானம் பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இங்கு இருக்கும். பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை காண பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பக்தர்களால் கோவில் விழாக்கோலம் பூண்டது. காலை 7 மணிக்குள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு வருகை புரிந்துள்ளனர்.

23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடப்பதால் பக்தர்கள் அதிக அளவில் கூடி இருக்கிறார்கள். இதனால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்.திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம் காணப்படுகிறது.
இன்று முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆய்வாளர்கள் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. மண்டல ஐஜி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டள்ளது.
தஞ்சையில் மொத்தம் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பல லட்சம் பேர் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவில் மதிற்சுவருக்குட்பட்ட வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மக்களுக்கும், விஐபிக்களுக்கும் தனி தனி வரிசை அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே 50 ஆயிரம் பேர் திரண்டு நின்று குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு செல்ல அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அங்கு அதிக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு மருத்துவ குழுக்கள், பெண்களுக்கு உதவி செய்ய தனிக்குழு, தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.தமிழர்களின் கட்டடகலையை உலகுக்கு பறைசாற்றிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications