Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணி சங்கர் அய்யரின் கோட்டை! மயிலாடுதுறையில் வெல்லுமா காங்கிரஸ்.. வேட்பாளர் யார்? களநிலவரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: கடந்த 2019 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக வென்றது. ஆனால் வரும் லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் கோட்டையான இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வெல்லுமா? அங்கு வேட்பாளராக யார் களமிறங்குவார்? களநிலவரம் என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:

தமிழ்நாட்டில் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Lok Sabha Election 2024 Why DMK gives Mayiladuthurai to Congress Who will be contest from this seat details here

இதுதவிர புதுச்சேரி தொகுதியும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட வெற்றி பெற்ற திருச்சி தொகுதி இப்போது வைகோவின் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் திருச்சி தொகுதிக்கு பதில் காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் பிரச்சனை வராமல் இருப்பதற்காக திமுக இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்துள்ளது. தற்போது மயிலாடுதுறை எம்பியாக திமுகவின் ராமலிங்கம் உள்ளார். கடந்த 2019 தேர்தலில் இவர் வெற்றி பெற்றாலும் கூட தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் தொகுதி.. காங்கிரஸ் வேட்பாளர் மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்? மெகா பிளான்


இந்நிலையில் தான் மயிலாடுதுறை தொகுதி நிலவரம் என்ன? அங்கு காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் கடந்த 1952 முதல் 2019 வரை மொத்தம் 17 தேர்தல் நடந்துள்ளது. முதலில் மயூரம் என்ற பெயரில் இந்த தொகுதி இருந்தது. 1984 தேர்தலில் தான் மயிலாடுதுறை என மாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை 17 தேர்தல்கள் நடந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் 1991, 1999, 2004 தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார்.

தமிழ்நாடு + புதுச்சேரி.. 10 தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா? உத்தேச பட்டியல்


இந்த மயூரம் என்ற பெயரில் இந்த தொகுதிக்கு முதல் முதலாக 1952ல் தேர்தல் நடந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனந்த் நம்பியார் வெற்றி பெற்றார். 1962ல் காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர், 1967, 1971ல் திமுகவின் சுப்ரா வேலு ஜெயித்தார். 1977, 1980 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் குடந்தை ராமலிங்கம், 1984, 1989 ல் இஎஸ்எம் பஷீர் முகமதுவும் வென்றனர். அதன்பிறகு 1991ல் மணிசங்கர் அய்யர் வெற்றி பெற்றார். பிறகு 1996, 1998 தேர்தல்களில் இந்த கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் வசமானது. 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிவி ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 1998 ல் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். பிறகு 1999, 2004 தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் மணி சங்கர் அய்யர் வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து 2009, 2014ல் அதிமுக வென்றது. 2009 ல் முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், 2014ல் பாரதி மோகன் ஆகியோர் வென்றனர். கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் ராமலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது திமுகவின் ராமலிங்கம் சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. வரும் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளான பீரவீன் சக்கரவர்த்தி, ஹசினா சையத் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+