மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார்.. அமைச்சர் துரைக்கண்ணு விமர்சனம்
மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார் என்று அமைச்சர் துரைக்கண்ணு விமர்சித்துள்ளார்.
கும்பகோணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களை கவர சைக்கிள் ஓட்டிப்பார்த்தார்.. டீக்கடையில் டீ குடித்தார்.. எதுவும் பலனளிக்காத நிலையில், இப்போது மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார் என்று அமைச்சர் துரைக்கண்ணு விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இன்னைக்கு ஆட்சி கலைந்துவிடும், நாளைக்கு நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று மரத்தடி ஜோசியர் போல அடிக்கடி ஆரூடம் சொல்லி வருகிறார். மக்களை கவர, சைக்கிளில் பயணம் செய்து பார்த்தார், டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார்.. இதில் எதுவுமே பலன் அளிக்கவில்லை என்றதும், இப்போது மரத்தடி ஜோசியர் ஆகிவிட்டார். ஆனால் அவர் சொல்வதெல்லாம் பலிக்காது. ஏனெனில் அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அதனால் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி.
அதேபோலதான் டிடிவி தினகரனும். அவர் செய்த துரோகம் காரணமாகவே சசிகலா ஜெயிலில் உள்ளார். அவர் பேச்சை கேட்ட மற்ற 18 எம்எல்ஏக்களும் பதவியை இழந்து நிற்கின்றனர். அதனால் குக்கரால் இனி விசில் அடிக்கவே முடியாது. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் சரி, எத்தனை தினகரன் வந்தாலும் சரி அதிமுகவை அசைக்கவே முடியாது' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications