மோடி இனி பிரதமர் ஆகவே முடியாது.. ராகுல்தான் பிரதமர்.. அடித்து சொல்கிறேன்.. ஸ்டாலின் முழக்கம்!
மோடியால் இனி பிரதமர் ஆகவே முடியாது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: மோடியால் இனி பிரதமர் ஆகவே முடியாது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தற்போது சமூக நீதி மாநாட்டு நடந்து கொண்டு இருக்கிறது. திராவிட கழகம் சார்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதன் தோழமை கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். திமுக சார்பில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

பிரதமர் நேரு எதிர்த்தார்
ஸ்டாலின் தனது பேச்சில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிற்கு அப்போதே பிரதமர் நேரு எதிர்ப்பு தெரிவித்தார். பொருளாதார அளவுகோல் என்பது மாறிவிடும். அதனால்தான் அன்றே பொருளாதார அளவுகோல் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஏற்கனவே இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமுறை தோல்வியை தழுவி இருக்கிறது.

நீதிபதி சின்னப்ப ரெட்டி
முன்னாள் நீதிபதி சின்னப்ப ரெட்டி இது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை, இது சமூக நீதி திட்டம் என்றார். ஆனால் பாஜக கொண்டு வந்திருப்பது சமூக நீதியை குழி தோண்டி புதைப்பது. மோடி 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்ததால் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். ஏதாவது தந்திரம் செய்து லோக்சபா தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார்.

விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் எங்கள் விவசாயிகள் போராடிய போது மோடி எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லியில் நிர்வாண போராட்டம் கூட நடத்தினார்கள். ஆனால் மோடி ஒருவரையும் கூட அழைத்து பேசவில்லை. எல்லா விவசாயிகளை அவர் அவமானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினார்.

கருணாநிதி இலவசம்
ஆனால் விவசாயிகளுக்காக கருணாநிதி ஆட்சியில் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில்தான் அப்போதே அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களை திமுக தள்ளுபடி செய்தது. மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அப்படியே விவசாயிகள் தள்ளுபடி செய்தார். இதனால் அதிமுகவினர்தான் அதிக பலன் பெற்றார்கள்

15 வருடம் பின்னோக்கி
மக்களிடம் மோடி பணத்தை பிடிங்கிவிட்டு, இப்போது விவசாயிகளுக்கு கொடுப்பதாக நடிக்கிறார். மோடியால் இந்தியா 15 வருடம் பின்னோக்கி சென்றுள்ளது. மோடி இனி பிரதமர் இருக்கையில் அமரவே முடியாது. ராகுல் காந்திதான் பிரதமர் ஆவார்: அடித்து சொல்கிறேன். தமிழகம்தான் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

ராகுல்தான்
கார்ப்ரேட், ஊழல், மதம் இந்த மூன்றையும் வைத்துதான் மோடி ஆட்சியை நடத்துகிறார். கலவரங்களை தூண்டி, மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மோடி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். ஆனால் மோடியால் இனி எப்போதும் பிரதமர் ஆகவே முடியாது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications