சவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்!
உயிருடன் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது
தஞ்சாவூர்: சுடுகாட்டில் சவப்பெட்டியை இறக்கி வைத்தபோதுதான குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிந்து அதிர்ந்தனர் பெற்றோரும், உற்றோரும்! எனினும், டாக்டர்களின் அலட்சியத்தினால் அநியாயமாக பறிபோன கெவினின் மரணத்தை தமிழக மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கரன் - பிரித்தி. இவர்களுக்கு கெவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.
திடீரென கெவினுக்கு ஜூரம் வந்துவிட்டது. அதனால், நேற்று காலை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி சென்றனர். அப்போது, செக் செய்த டாக்டர்களோ, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்றனர்.

அதிர்ச்சி
இதனால் அதிர்ந்த பெற்றோர், அழுதுகொண்டே குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்து வந்து இறுதி சடங்கு செய்தனர். அப்போது குழந்தையை சவப்பெட்டியில் இருந்து குழந்தையின் அசைவு தெரியவும், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். அதனால் திரும்பவும், கெவினை தூக்கிக்கொண்டு அதே ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

கண்ணீர்
"குழந்தைக்கு உயிர் இருக்கு.. என்னன்னு பாருங்க" என்று கண்ணீருடன் பதறியவாறே சொன்னார்கள். அப்போது டாக்டர்கள், இப்பதான் சில நிமிடத்துக்கு முன்புதான் உயிர் போயிருக்கு என்றனர். இதை கேட்டதும், திரும்பவும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ஆவேசம் ஆகிவிட்டனர்.

ஆவேசம்
உடன்வந்த சொந்தக்காரர்கள், கிராம மக்கள் என அந்த ஆஸ்பத்திரி முன்பே திரண்டு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். குழந்தையை முதலில் தூக்கிட்டு வந்தபோதே டாக்டர்கள் சரியாக செக் செய்திருந்தால் எங்கள் குழந்தை இறந்திருக்காது.

முற்றுகை
குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி, 5 மணி நேரம் கழித்துதான் உயிர் போயிருக்கு, இவங்க அலட்சியத்தால எங்க குழந்தையை பறி கொடுத்துட்டோமே"என்று அழுதவாறே தெரிவித்தனர். குழந்தை இப்படி அநியாயமா உயிரிழந்த சம்பவத்தினால் தமிழக மக்கள் நிலைகுலைந்து போய்விட்டனர்.

குமுறல்
பலரையும் இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வெறும் ஜுரத்தினால் உயிர் போய்விட்டது என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாவிட்டாலும், முதல் தடவையே ஒழுங்காக செக் செய்திருக்க வேணாமா என்று மக்கள் குமுறுகிறார்கள். கெவினின் இந்த மரணத்தை இன்னமும் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லைதான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications