நில அளவீடு, நில ஆவணங்கள்.. பட்டாவில் பெயர் மாற்றம்.. தஞ்சாவூரை திகைக்க வைத்த மன்னார்குடி தாசில்தார்
தஞ்சாவூர்: பட்டா பெயர் மாற்றுவதற்கு லஞ்சம் கேட்டிருக்கிறார் சீனியர் அதிகாரி.. மன்னார்குடியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், லஞ்சம் வாங்கும்போது, அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே உள்ளது.. இதை தடுப்பதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், கடிவாளங்களையும் பதிவுத்துறை முன்னெடுத்து வருகிறது. ஆனாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.

கடும் கண்டனம்: நேற்றுகூட, சென்னை ஹைகோர்ட் வழக்கு ஒன்றில், இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்தது.. நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணையில், ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னபோது:
"ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு கொலை, வன்முறைகளை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்? வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருகிறது.. சம்பந்தப்பட்ட வழக்கில், ரவுடிகளுடன் போலீசார் கைகோர்த்து கொண்டதால் உண்மையான நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்று நிகழ்ந்தால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை குலைந்து விடும்.
நில அபகரிப்பு: நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற முடியாமல் தோல்வி அடைந்ததால், வேறு வடிவத்தில் நில அபகரிப்பை மேற்கொண்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார். விரிவான புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
புகார்களை விருப்பு வெறுப்பின்றி, திறமையாக விசாரிக்க முடியாத நிலையை, புலனாய்வு அமைப்புகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது வேதனையளிக்கிறது. இந்த நிலை நீடித்தால், ஏழை எளிய அப்பாவி மக்களுக்கு, போலீசிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது. போலீஸ் மீது நம்பிக்கை இழந்து விடுவர். இது, அராஜகத்துக்கு தான் வழிவகுக்கும். அதிகாரமிக்க அரசியல்வாதிகள் அல்லது ரவுடிகளிடம், அவர்கள் அடைக்கலம் புகுந்து விடலாம். இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது.
அரசியல்வாதிகள்: ரவுடிகள், அரசியல்வாதிகள் உதவியுடன் நில அபகரிப்பு நடப்பதும், அதனால் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் சில மாதங்களாக நடப்பதையும் பார்க்கும் போது, போலீசாரின் செயல்பாடுகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது" என்று ஹைகோர்ட் நேற்றைய தினம் கடுமையாக கண்டித்திருக்கிறது.
இந்நிலையில், திருச்சியில் 4 பேர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்.. வளநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் லஞ்சம் வாங்கினார்களாம்.. இது தொடர்பாக புகார் உண்மை என நிரூபணமானதால், 4 பேரையுமே சஸ்பெண்ட் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் இன்று உத்தரவிட்டிருக்கிறார்.
அதுபோலவே, பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் துணை வட்டாட்சியர்.. இவரையும் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் கோவி சக்திவேல்.. 51 வயதாகிறது.. திமுக வார்டு செயலாளராக உள்ளார்.. இவரது மனைவி சித்ரா ரேவதி இவருக்கு 45 வயதாகிறது.. 7 வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர்.
இந்தநிலையில், கோவி சக்திவேல், தனது மனைவி சித்ரா பெயரில் உள்ள பட்டா ஒன்றில் பெயர் திருத்தம் மேற்கொள்ளுவது தொடர்பாக கடந்த 3ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் (40) என்பவர் பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
கைது: இதுதொடர்பாக கோவி சக்திவேல், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனை பேரில் கோவி சக்திவேல் ரூ.15 ஆயிரம் பணத்துடன், மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று, துணை வட்டாட்சியர் நாகராஜுவிடம் கொடுத்தார்... அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், நாகராஜூவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.. இதையடுத்து, நாகராஜ் மற்றும் அலுவலகத்திலிருந்த மற்ற அதிகாரிகளிடம், தீவிர விசாரணை நடந்து வருகிறது.
லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும்கூட, லஞ்சம் வாங்குவது இன்னும் குறையவே இல்லை.












Click it and Unblock the Notifications