சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட தனியார் மதுபானக் கடை.. கும்பகோணத்தில் கோவில் அருகே அதிரடி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் நகரமான கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் நாகேஸ்வரன் கோவில் அருகே புதிதாக நடத்தப்படும் தனியார் மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது . குறிப்பிட்ட தனியார் மதுபான கூடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மதுபான கூடத்தை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் திறக்க அரசு கொள்கை ரீதியாக அனுமதிப்பது இல்லை. டாஸ்மாக் மட்டுமே சில்லறை வினியோகமாக மதுபானத்தை விற்கிறது. பெரிய ஸ்டார் ஓட்டல் மதுபான உரிமங்களைப் பெறுவதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளது. அது எதார்த்தத்தில் சாத்தியமே இல்லை.. எனவே 'மனமகிழ் மன்றம்' அல்லது 'கிளப்' என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் உரிமம் பெறப்படுகிறது. இதில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்பட வேண்டும் . இதுதான் அடிப்படை விதி. ஆனால் டாஸ்மாக் போல் மனமகிழ் மன்றங்கள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் இருக்கிறது. அத்துடன் நேரத்தை பொறுத்தவரை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகின்றன

அதேநேரம் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன என்பது பற்றி சரியான புள்ளி விவரங்கள் இல்லை. எனினும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆண்டு தான் 500 மதுக்கடைகளை மூடினார்கள். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் 600 மனமகிழ்மன்றங்கள் திறக்கப்பட்டு முழுவீச்சில் மதுவணிகம் நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் முந்தைய ஆட்சிகளில் 900 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருந்தன. இப்போது திறக்கப்பட்டிருப்பதையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 1500 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகளை விட அதிக எண்ணிக்கையில் மனமகிழ்மன்றங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கோயில் நகரமான கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் நாகேஸ்வரன் கோவில் அருகே புதிதாக நடத்தப்படும் தனியார் மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது . இதில் மது அருந்துவதற்காகநேற்றுஅங்கு வந்த மது பிரியர்கள் மது அருந்திய பின் பில் தொகையில் முரண்பாடு இருப்பதாக மதுக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்குவாதம் முற்றியதில் மதுக்கடையின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி எறிந்தும் காலி மதுப்பாட்டில்களை தரையில் உடைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்இதனால் மதுக்கடையில் மதுக் குடித்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்துவெளியேறி ஓடியுள்ளனர். பொருட்களை சேதப்படுத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இது குறித்து சரித்திர பதிவேடு குற்றவாளி சரத் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய நபர்களை சிசிடிவி காட்சிகளின் மூலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சூறையாடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் இந்த சம்பவம் உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிதாக வந்த இந்த மதுபான கடைக்கு( 5star)பல்வேறு கட்சியினர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications