காட்டு பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள்.. காம வேட்டையாடிய ரமேஷ்.. வளைத்துபிடித்த போலீஸ்
பெண்களை சீரழித்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்
Recommended Video
தஞ்சாவூர்: காட்டுப் பகுதியில் ஒதுங்கும் கள்ளக்காதல் ஜோடிகளை கண்டால் ரமேஷூக்கு கொண்டாட்டம்.. அங்கேயே அந்த ஜோடியை மிரட்டி, இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரமேஷ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
தஞ்சையை அடுத்துள்ள பகுதி வல்லம். இங்குள்ள சுற்று வட்டாரங்களில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக பள்ளியக்ரஹாரம் பிள்ளையார் பட்டி புறவழிச்சாலையில் யார் வந்தாலும், அவர்களிடம் கட்டாயம் கொள்ளை நடந்துவிடும்.
பைக்கில் வந்தாலும், தனியாக வந்தாலும்,அவர்களை மறித்து, நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இதை செய்து வந்தவர்கள் முகமூடி கொள்ளையர்கள். கையில் ஆயுதங்களையும் வைத்து கொள்ளையில் ஈடுபடுவதால், இவர்களை யாராலுமே பிடிக்க முடியாமல் இருந்தது.

கொள்ளைகள்
இது சம்பந்தமாக நிறைய புகார்கள் போலீசுக்கு சென்று கொண்டே இருந்தது. போலீசாரும் 2 வருடமாக இந்த கொள்ளையை நடத்துவது யார்என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இறுதியில், தஞ்சை சரக டிஐஜியே நேரடியாக இதில் தலையிட்டார். தனிப்படை அமைக்கப்பட்டது.. கொள்ளையனுக்கு வலை விரிக்கப்பட்டது.

விசாரணை
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பும் கெல்வின் என்பவரிடம் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தங்க சங்கிலியை பறித்து சென்றது. இதையும் போலீசார் விசாரித்து அது சம்பந்தமான தீவிர வேட்டையில் இறங்கினர். அப்போது, ஒரு இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் எதைஎதையோ உளறினார்.. இறுதியில் அவர்தான் கெல்வினிடம் செயினை பறித்தவர் என தெரியவந்ததும் விசாரணை தீவிரமானது. தஞ்சை மானோஜி பட்டியை அந்த இளைஞனின் பெயர் ரமேஷ். 27 வயதாகிறது.

ரமேஷ்
இதுவரை 2 வருடமாக நடந்து வந்த எல்லா கொள்ளைக்கும் காரணம் இந்த ரமேஷ்தான் என்பதும் தெரியவந்தது. மொத்தம் 3 பேர் கொண்ட கும்பல் இது. இதற்கு ரமேஷ்தான் தலைவன். இவர்களது நேரம் இரவு 7 மணி முதல் 10 மணி வரையாம். பைபாஸ் ரோட்டில் போய் இந்த நேரத்தில் நின்று கொள்வார்களாம். அந்த பக்கமாக வருபவர்களை தாக்கி பணம், நகை கொள்ளை அடிப்பார்களாம்.

காதலர்கள்
அது மட்டுமல்ல.. தஞ்சை பகுதியில் காலேஜில் படிக்கும் மாணவிகள், தங்களது காதலனை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வந்து ஜாலியாக இருந்துவிட்டு போவார்களாம். தனிமையான காட்டுப்பகுதி இடம் இது.. அதனால், இங்கு வரும் கள்ளக்காதல் ஜோடிகள், காதலர்களை, காத்திருந்து ரமேஷ் அவர்களை மடக்கி மிரட்டுவானாம். பிறகு இளம் பெண்களையும் மிரட்டி, காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விடுவானாம். இதெல்லாம் இப்போதுதான் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரமேஷ் மட்டும்சிக்கி உள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications