தந்தை ராஜராஜனை விஞ்சிய தனயன்.. யார் இந்த ராஜேந்திர சோழன்? கங்கை கொண்ட சோழபுரம் ஏன் தலைநகரானது?
தஞ்சாவூர்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய வரைபடத்தையே மாற்றி வரைந்த மாமன்னன் ராஜேந்திர சோழனைப் போற்றும் விதமாக (Rajendra Chola), கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி பிரம்மாண்டமான ஆயிரம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, ராஜேந்திர சோழனின் நினைவாக புதிய நாணயம் ஒன்றை வெளியிடவுள்ளார். இசைஞானி இளையராஜாவின் 20 நிமிட இசை நிகழ்ச்சி விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கவுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலயம், யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், அவரது கங்கை வெற்றியைப் பறைசாற்றும் அற்புதச் சிற்பக் கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. கங்கைச் சமவெளியை ராஜேந்திர சோழன் வென்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா, தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

ராசேந்திர சோழன் என்றும், ராஜேந்திர சோழன் என்றும் அழைக்கப்படும் இந்த மாமன்னன் யார்? ராஜராஜ சோழனின் புகழையையும் இந்த ராஜேந்திர சோழன் விஞ்சியது எப்படி? (Raja raja cholan history in Tamil) பார்க்கலாம் வாங்க..
தமிழ் நிலத்தின் பொற்காலப் பேரரசர்களுள் ஒருவராகவும், இந்திய வரலாற்றின் இணையற்ற மாமன்னனாகவும் போற்றப்படும் முதலாம் ராஜேந்திர சோழனின் கம்பீரமான வரலாறு, காலம் கடந்தும் நம்மை வியக்க வைக்கிறது. தந்தையை மிஞ்சிய தனயனாக, தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டியெழுப்பிய சோழப் பேரரசை கடல் கடந்தும் விரிவுபடுத்தி, உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவன் ராஜேந்திர சோழன்.
ராஜராஜனின் வாரிசு - இளவரசனாகப் போர் களத்தில்
முதலாம் ராஜராஜ சோழனின் ஒரே மகனான ராஜேந்திரன், கி.பி. 1012 ஆம் ஆண்டிலேயே தந்தையுடன் இணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் படைகளுக்குத் தலைமை தாங்கி வெற்றிகளைப் பெற்று, இளம் வயதிலேயே தனது போர்த் திறனை நிரூபித்தார். 'பஞ்சவன் மாராயன்', 'மும்முடிச் சோழனின் களிறு' போன்ற பட்டங்களை இவருக்குப் பெற்றுத் தந்தது இவரின் ஆரம்பகால வெற்றிகள். கொங்கணம், துளுவம் போன்ற நாடுகளை வென்றதுடன், சேர மன்னனை மலை நாட்டை விட்டு ஓடச் செய்து, தெலுங்கர் மற்றும் இராட்டிரகர்களையும் தோற்கடித்தார்.
அரியாசனத்தில் ராஜேந்திரன் - போர்க்களமே இல்லம்!
கி.பி. 1014 இல் முழுமையான சோழப் பேரரசின் அரியணையை ஏற்ற ராஜேந்திரன், தனது ஆட்சி காலத்தில் பெரும்பாலான நாட்களைப் போர்க்களத்திலேயே கழித்தார். மேற்குச் சாளுக்கியருடன் தொடர்ந்து பகைமை நீடித்த நிலையில், முதலாம் ஜெயசிம்மனை துங்கபத்திரை நதிக்கரைக்கு அப்பால் விரட்டி வெற்றி பெற்றார்.
"கங்கை கொண்ட சோழன்" - வடதிசை நோக்கிய மகத்தான வெற்றி
ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தின் உச்சக்கட்ட சாதனைகளில் ஒன்று, கி.பி. 1019 இல் கங்கை நோக்கிய அவரது படையெடுப்பு. வங்காளத்தின் பால வம்ச மன்னனான மகிபாலனை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்றார். இந்த மகத்தான வெற்றியின் நினைவாக, "கங்கை கொண்ட சோழன்" என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டதுடன், "கங்கைகொண்ட சோழபுரம்" என்ற புதிய தலைநகரத்தையும் உருவாக்கினார். தஞ்சையை விடப் பெரியதாகக் கருதப்படும் இந்த நகரம், சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கியது. இங்கு அவர் கட்டிய கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், இன்றும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடல் கடந்த வெற்றிகள் - "கடாரம் கொண்டான்"
ராஜேந்திர சோழன் வெறும் நிலப்பரப்பு மன்னன் மட்டுமல்ல; கடல் கடந்தும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்தியப் பேரரசருள் முதன்மையானவர். அவரது கடற்படை பலம் வாய்ந்ததாக இருந்தது. கி.பி. 1025 இல் ஸ்ரீவிஜயம் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியப் பகுதிகள்) மற்றும் கடாரம் (மலேசியாவின் கெடா மாநிலம்) மீது படையெடுத்து வெற்றி பெற்றார். இது இந்திய வரலாற்றிலேயே ஒரு மன்னன் கடல் கடந்து, அயல்நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்ற அரிய நிகழ்வாகும். இந்த வெற்றியின் மூலம் "கடாரம் கொண்டான்" என்ற பெருமைமிகு பட்டத்தையும் பெற்றார். இலங்கை மீதும் படையெடுத்து, அங்கிருந்த ஐந்தாம் மகிந்தனைச் சிறைபிடித்தார்.
நிர்வாகமும், தொலைநோக்குப் பார்வையும்
ராஜராஜ சோழனைப் போலவே ராஜேந்திரனும் சிறந்த நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்தார். தொலைநோக்குப் பார்வையுடன், தனது படைகளின் நகர்வு தஞ்சை மக்களின் வாழ்வாதாரமான வயல்வெளிகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்க, புதிய தலைநகரை வறண்ட நிலப்பரப்பில் உருவாக்கினார். தலைநகருக்கு நீர்வளம் முக்கியம் என்பதால், சுமார் 20 மைல் நீளத்திற்கு ஒரு பெரிய ஏரியை வெட்டி, அதற்கு "சோழ கங்கம்" என்றும் பெயரிட்டார்.
ராஜேந்திர சோழன் வெறும் வீரர் மட்டுமல்ல, கலை மற்றும் ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழர்களின் வீரத்தையும், உலக அரங்கில் அவர்களின் அடையாளத்தையும் பறைசாற்றும் கம்பீரமான மன்னனாக ராஜேந்திர சோழன் நிலைத்து நிற்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications