Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி மாவு அரைக்க ரேஷன் அரிசி.. லாரியில் எட்டிப்பார்த்த போலீஸ்.. அப்படியே மலைத்த கும்பகோணம்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இட்லி மாவு அரைக்க ரேஷன் அரிசியை பயன்படுத்த முயன்றுள்ள 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன், பல வருட காலமாகவே நடந்து வந்த குற்ற சம்பவம் ஒன்றும், தற்போது வெளிவந்து கும்பகோணத்தையே அதிர வைத்து வருகிறது.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, ரேஷன்தாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, குடும்ப அட்டைதாரர்களின் துயரத்தையும் தமிழக அரசு தீர்த்து வருகிறது. எனினும், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் இன்னமும் ஒழிக்க முடியாமல் உள்ளது.

ration rice idli batter kumbakonam police

ரேஷன் அரிசியை, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது அதிகரித்தவாறே உள்ளது.. தமிழக எல்லைகளில் இதற்கென்றே இருக்கும் புரோக்கர்கள், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று காசு பார்த்து வருகிறார்கள். இதனால், அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, பருப்பு முறையாக கிடைக்காமல் போய்விடுகிறது.

தமிழக அரசு: இந்த ரேஷன் பொருள் கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி யாராவது ரேஷன் பொருளை கடத்தினால் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டு வருகிறது. அதிரடி ரெய்டு, தொடர் விழிப்புணர்வு போன்றவை காரணமாக, தற்போது ஓரளவு ரேஷன் பொருட்கள் கடத்தல்கள் குறைந்துள்ளன.

இன்றைய தினம்கூட, ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் சிக்கியிருக்கிறார்கள். கும்பகோணம் ஆடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மொத்த கிடங்கு செயல்பட்டுவருகிறது.

ரேஷன் கடைகள்: இங்கு ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கமாகும்.. சிலசமயம், நைட் நேரமாகிவிட்டால், குடோனுக்கு வெளியே வெளியூருக்கு செல்ல வேண்டி லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி வைத்து விட்டு, அன்றைய தினம் அங்கேயே தூங்கிவிட்டு டிரைவர்கள், மறுநாள் காலையில் எடுத்து செல்வார்கள்.

ration rice idli batter kumbakonam police

இந்நிலையில், நேற்றிரவு திருவிடைமருதுார் போலீஸார், அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, குடோனுக்கே வெளியே ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் நிற்பதை கண்டனர்.. இதனால் அங்கு சென்று பார்த்தபோதுதான், குடோனுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து, ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக ஆட்டோ மற்றும் பைக்குகளில் சிலர் ஏற்றிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

ஆட்டோ டிரைவர்:
பின்னர் இந்த கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணதாசன், லாரி டிரைவர் சுபாஷ் உள்ளிட்ட 2 பேரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போதுதான், இவர்கள் எப்போதுமே, ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் என்பது தெரியவந்தது. ஆவணியாபுரம், மதினா தெருவைச் சேர்ந்த முகமது பைசல் (23) என்பவர், சொந்தமாக மில் வைத்திருக்கிறார்.. இங்கு, இட்லி மாவு மொத்தமாக அரைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.. இதற்கு முன்பு, முகமது பைசல், ஏற்கனவே வேறு இட்லி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.. அந்த நிறுவனத்தில், இப்படித்தான் ரேஷன் அரிசியை மொத்தமாக பிளாக்கில் வாங்கி விற்றுள்ளதை பார்த்துள்ளார்.

மாவு மில்: உடனே இதுபோலவே தானும் சொந்தமாக தொழிலை ஆரம்பித்திருக்கிறார். கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை மொத்தமாக கொண்டு வந்து தரும் நபருடன் பைசலுக்கு தொடர்பு ஏற்பட்டதையடுத்து, இட்லி மாவு அரவை மில் ஒன்றையே தொடங்கி நடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.

சில வருடங்களாகவே இந்த அரிசி கடத்தல் நடந்து வந்துள்ளது. அதற்கு லாரி டிரைவர் சுபாஷ், உதவியாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பைசலையும் கைது செய்துள்ள போலீசார், இது தொடர்பான விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர்.. இவர்களிடமிருந்து 900 கிலோ அரிசி, ஆட்டோ, பைக் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..

ரேஷன் அரிசி: இந்த கடத்தலில், லாரி ஒப்பந்தக்காரர் மற்றும் கிடங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? ரேஷன் அரிசியை மூட்டையோடு விற்பனை செய்து விட்டு, எப்படி கணக்கு காட்டப்படுகிறது? என்கிற கோணங்களில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இட்லி மாவு தயாரிக்க, ரேஷன் அரிசியை கடத்தி சென்று 3 பேர் கைதான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை கும்பகோணத்தில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+