சசிகலா தம்பி செய்த பரபர காரியம்.. கோவிலுக்கு போனவர் திடீரென "ராஜா" கேம்பில் விசிட்.. குஷியில் திமுக

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள சசிகலா தம்பி திவாகரன் திடீரென நேற்று திமுக கேம்பிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபால சுவாமி கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது.. இந்த திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான வெண்ணை தாழி சமீபத்தில் நடைபெற்றது. பக்தர்கள் ஒன்றாக வந்து வெண்ணெய் அடிக்கும் இந்த விழாவில் மன்னார்குடி அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

ஒருபக்கம் சசிகலாவின் தம்பி திவாகரன், இன்னொரு பக்கம் திமுக எம்எல்ஏ டி. ஆர். பி ராஜா என்று முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம் இந்த வெண்ணை தாழிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இங்கு அவ்வப்போது போது அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசுவதும் கூட நடக்கும்.

எப்படி

எப்படி

இப்படிப்பட்ட நிலையில் இந்த வெண்ணை தாழி நிகழ்வுக்கு சசிகலாவின் தம்பி திவாகரன் சென்று இருந்தார். மன்னார்குடியில் நல்ல வாய்ஸ் இருக்கும் இவருக்கு அந்த விழாவில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கோவிலில் வழிபாடு நடத்தியவர் திடீரென என்ன நினைத்தாரோ அருகில் இருந்த திமுக கேம்பிற்கும் சென்றுள்ளார்.

டிபி ராஜா

டிபி ராஜா

மன்னார்குடி திமுக வேட்பாளர் எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்காக அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் திமுக கேம்பிற்கு சென்று திவாகரன் திடீரென விசிட் அடித்துள்ளார். ஆனால் திவாகரன் அங்கு சென்ற போது ராஜா இல்லை. அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுவிட்டார் . இதையடுத்து ராஜாவின் பிரச்சாரம் எப்படி போகிறது.. ஆதரவு எப்படி இருக்கிறது என்றெல்லாம் திவாகரன் விசாரித்து இருக்கிறாராம்.

என்ன

என்ன

திடீரென சசிகலா தம்பி ஏன் திமுக கேம்பிற்கு சென்றார். திமுகவினரிடம் ஏன் இப்படி பாசமாக விசாரித்தார் என்று தெரியவில்லை. ஆனால் திவாகரன் திமுக கேம்பிற்கு சென்ற நேரம்தான் இன்னும் சந்தேகத்தை அளிக்கிறது. சரியாக சசிகலா தஞ்சை விசிட் அடித்து இருக்கும் போது திவாகரன் இப்படி மன்னையில் திமுக கேம்ப் சென்றுள்ளார்.

தொடர்பு

தொடர்பு

இதுதான் புரியாத புதிராக உள்ளது. இது இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் வந்துள்ளது. அதோடு திவாகரன் வருகையால் திமுக கேம்ப் கொஞ்சம் சந்தோஷத்தில் உள்ளது. இங்கு அதிமுக வேட்பாளராக சிவ.ராஜமாணிக்கம் உள்ளார். இவரை திவாகரன் இந்த தேர்தலில் இதுவரை ஆதரிக்கவில்லை.

கஷ்டம்

கஷ்டம்

மன்னார்குடியில் அதிமுகவினர் திவாகரன் ஆதரவு இல்லாமல் வெற்றிபெறுவது கஷ்டம். திவாகரனும் அண்ணா திராவிடர் கழகம் ஆரம்பித்த பின் அதிமுகவிற்கு ஆதரவு தருவது இல்லை. இதனால் ராஜா தரப்பு கொஞ்சம் சந்தோஷத்தில் இருக்கிறது. திவாகரன் சப்போர்ட் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று திமுக தரப்பு கொஞ்சம் நம்பிக்கையில் உள்ளது.

சொன்னார்

சொன்னார்

ஏற்கனவே திவாகரன் பல மேடைகளில் திமுகவிற்கு ஆதரவாக பேசி உள்ளார். ஸ்டாலினை புகழ்ந்து பல இடங்களில் பேசி உள்ளார். இப்போது இவர் திமுக கேம்பிற்கும் சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+