நொறுங்கிய மனக்கோட்டை.. "அவர்" வருகிறார் என்று தெரிந்ததும்.. இடத்தை காலி செய்த சசி.. பரிதாபம் பாஸ்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சசிகலா சென்னைக்கு கிளம்பி சென்றதுதான் அரசியல் வட்டாரத்தில் இன்னும் பேச்சாக இருக்கிறது.. இது குறித்து அமமுகவினர் சிலரிடம் பேசினால்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை சொல்கிறார்கள்! சசிகலா திடீரென சென்னை கிளம்பி சென்றது ஏன்.. என்னதான் நடந்தது?
சசிகலாவின் திட்டப்படி அவர் மூன்று நாட்கள் தஞ்சையில் தங்கி இருக்க வேண்டும். முதல் இரண்டு நாட்கள் கோவில் வழிபாடு, காது குத்து, கிடா வெட்டு இதுதான் பிளான். கடைசி நாள் நேராக மறைந்த கணவர் நடராசனின் நினைவிடத்தில், அவரின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வேண்டும்.
இதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் நேற்று நடராசனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தாமல் சசிகலா முதல்நாள் இரவே சென்னைக்கு திரும்பி சென்றுவிட்டார். தினகரன் நேற்று நடராசனின் நினைவிடத்திற்கு வந்தார்.

நினனவிடம்
தினகரனின் வருகையை தெரிந்து கொண்டுதான் சசிகலா சென்னைக்கு திரும்பி சென்றார். தினகரனை சந்திக்க சசி விரும்பவில்லை என்றெல்லாம் செய்திகள் வந்தன.. இதுதான் சசியின் சென்னை ரிட்டன் சர்ச்சை ஆக காரணம். உண்மையில் தினகரனுக்கும் சசிக்கும் கருத்து வேறுபாடா என்பதை தெரிந்து கொள்ள மன்னார்குடி வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.. அவர்களின் கூற்றுப்படி.. சசிகலா சில விஷயங்களை மனதில் வைத்துதான் சென்னைக்கு திரும்பி சென்றார் என்கிறார்கள்.

திரும்பினார்
அதன்படி சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிய பின் தினகரனை சில முறைதான் சந்தித்தார். அதுவும் யாருக்கும் தெரியாமல்தான். ஆரவாரம் இன்றிதான் இந்த சந்திப்பே நடந்தது. இதில் அரசியல் எல்லாம் எதுவும் பேசவில்லை. வெளியே தினகரன் உடன் தான் இருக்க கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருக்கிறார். அமமுகவிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சசிகலா காட்டிக்கொள்ள நினைக்கிறார்.

வெளிப்படையாக
இதனால் வெளிப்படையாக சசிகலா தினகரனை பார்க்க விரும்பவில்லை என்கிறார்கள். அதோடு சசிகலாவின் தஞ்சை பயணத்தை அதிமுக தரப்பும் நோட்டமிட்டு வந்தது. இதனால் அதிக நாட்கள் தஞ்சையில் இருக்க சசி விரும்பவில்லை. தேவையில்லாத சர்ச்சை, லைம் லைட் வேண்டாம் என்று அவர் நினைக்கிறார். தேர்தல் முடியும் வரை அமைதியாக இருப்போம்.

மீடியா
இந்த தஞ்சை பயணம் ஏற்கனவே மீடியாவில் பெரிதாக பேசப்பட்டுவிட்டது .. மேலும் இங்கே இருந்தால் சிக்கலாகும் என்பதால் அமைதியாக சென்னை போய்விட்டாராம். சசிகலாவின் திட்டப்படி தேர்தல் முடியும்வரை அதிமுகவிற்கு எந்த விதமான தொந்தரவும் செய்ய கூடாது, எந்த வகையிலும் அதிமுகவை சீண்ட கூடாது, வெற்றிக்கு சிக்கல் ஏற்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெறுக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட்டாரங்கள்
இன்னொரு பக்கம் சசிகலா இப்படி சென்னை போனதால் டிடிவி தினகரன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறுகிறார்கள். தினகரனுக்கு சசிகலாவின் அரசியல் விலகல் முடிவில் விருப்பம் இல்லை. அதை அவர் எதிர்த்தார். அதன்பின் அமமுகவிற்கு சசிகலா ஆதரவு கொடுப்பார் என்று தினகரன் மனக்கோட்டை கட்டினார் .

ஆனால்
ஆனால் அந்த வாய்சும் இதுவரை வரவில்லை. இப்போது ஒன்றாக ஒரே மேடையில் நிற்க கூட விரும்பாமல் சென்னை சென்றுவிட்டார் என்பதால் தினகரன் ஏமாற்றம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள். அமமுகவினரும் இதில் நாட் ஹாப்பி.. தேர்தலுக்கு பின்பாவது சசிகலா ஏதாவது செய்வாரா அல்லது மொத்தமாக இப்படியே அரசியலை விட்டு விலகிவிடுவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications