சீமானை அனாவசியமாக கொடுமைப்படுத்துறாங்க.. இது ரொம்ப தப்பு.. வரிந்து கட்டி ஆதரவு தரும் பாஜக எச்.ராஜா
தஞ்சாவூர்: நடிகையால் பலாத்கார புகார் சுமத்தப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். சீமானை அனாவசியமாக கொடுமைப்படுத்துவதாகவும் இது ரொம்பவும் தப்பு என்றும் பாஜகவின் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் எச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான் வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருவரை கைது செய்த காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீங்க நோட்டீஸை சர்வ் செய்வது என்றால் என்ன? நோட்டீஸை வீட்டில் ஒட்டிவிட்டுப் போனால் முடிந்துவிட்டது. ஆக ஒட்டிவிட்டுப் போக வேண்டியதுதானே..

இதன் பின்னர் சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க? ஆகவே இந்த அரசாங்கம்.. ஈவெ ராமசாமி நாயக்கரை (தந்தை பெரியாரை) சரியான முறையில் சீமான் அவர்கள் விமர்சித்து வருகிறார். இதனால் ஈவெ ராமசாமியின் கைக்கூலிகள் இந்த மாதிரி மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
சீமான் மீதான புகார் என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது.. சட்டப்படி நீதிமன்றம் நடக்கட்டும். ஆனால் எல்லோரது கவனத்துக்காகவும் சொல்கிறேன். உச்சநீதிமன்றம், உடலுறவு தொடர்பாக அண்மையில் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது; இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் அல்ல என்பது தீர்ப்பு. அதனால் சட்டம் அதன் கடமையை செய்யட்டும். ஆய்வாளர் எதற்காக இப்படி செயல்பட வேண்டும்?

ஆகவே இந்த அரசாங்கம், அவங்களால் தாங்க முடியவில்லை. ஈவெ ராமசாமி நாயக்கரின் (தந்தை பெரியார்) பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு.
தமிழ்நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணம் யார்? ஆட்சிக்கு வந்த உடன் இந்த திராவிடியன் ஸ்டாக் என்ன வேலை செஞ்சீங்க? அனைத்து பள்ளிக் கூடங்களிலும் நீதி போதனை வகுப்புகளை கேன்சல் செய்தீங்க.. அறம் செய்ய விரும்பு என்பதை நீக்கினீர்கள்.. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை எடுத்தீங்க.. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்த காரணத்தால் 1967-ல் இருந்து சமூக நன்னடத்தை கெட்டுப் போய்விட்டது. திராவிடியன் ஸ்டாக்கை தமிழ்நாட்டில் இருந்து அடித்து விரட்டாமல் பலாத்கார வன்முறைகளை நிறுத்த முடியாது. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications