"சிக்ஸர்" அடித்த தஞ்சாவூர்.. தமிழகத்தில் முதல்முறையாக மாணவர்களுக்கு "ஸ்பெஷல் பயிற்சி".. என்ன பாருங்க
தஞ்சாவூர்: தமிழகத்திலேயே முதன்முறையாக, கற்றல் குறைபாடுகள் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாடுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்த பெருமையை தஞ்சாவூர் மாவட்டம் தட்டிச்சென்றுள்ளது.
கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு கற்றல் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு உதவி அளிப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டம் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து இப்போது முதன்முறையாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

கற்றல் குறைபாடு: தஞ்சாவூர் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், கற்றல் குறைபாடு உடைய மாணவ- மாணவிகளுக்கு பிளிங்க் அறக்கட்டளை மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து சிறப்பு பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலை வகிக்க, மேயர் சண்.ராமநாதன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது மேயர் இந்த திட்டம் குறித்து கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தஞ்சை மாநகராட்சிகளில் 4 பள்ளிகளில் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, ஆங்கில மொழி மேம்பாட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலே தஞ்சாவூர் மாநகராட்சி தான் முதன் முதலில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது... மேலும் தஞ்சை மாநகராட்சியில் 17 பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலம்" என்று பெருமிதம் தெரிவித்தார்.
மாணவர்கள்: இந்த திட்டம், பெருத்த பலனை மாணவர்களுக்கு வழங்கும் என்று நம்பப்படுகிறது.. இந்தத்திட்ட மூலம் தினமும் ஒரு மணி நேரம் பள்ளியில் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இணைய வழியில் வெளிநாட்டு பள்ளிகளுக்கு ஈடான வகையில் பாடங்கள் கற்றுக் கொடுக்க போகிறார்கள்..
பிளிங்க் பவுண்டேஷன் திட்ட மேலாளர் மகாலட்சுமி இதை பற்றி சொல்லும்போது, இந்தத் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்றல் குறைபாடு சிறப்புப் பயிற்சியும், அவர்களுக்கான ஆங்கில மொழி மேம்பாட்டிற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறைபாடுகள்: இதே போல் பள்ளியக்ரஹாரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புதுப்பட்டிணம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நீலகிரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.. இதில், கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து, அவர்களை அதிலிருந்து மீட்கவும், அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளது.

அதுமட்டுமல்ல, 1 மணி நேரத்திற்கு 3 மாணவர்கள் வீதம், சென்னையிலுள்ள பிளிங்க் அறக்கட்டளை சார்பில் ஆன்லைன் வழியாக 3 மாதங்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர்களின் குறைகளை கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளும் நடத்தப்பட உள்ளது.
மாநகராட்சி பள்ளிகள்: இதற்காகவே, பள்ளியில் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட 1 கணினிக்கு 1 வெப் கேமரா, 5 ஹெட் போன்கள் என ரூ.6000 மதிப்புள்ள மென்பொருட்களை, அங்குள்ள ஒவ்வொரு கணினிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியிலிருந்து பொருத்தப்படவுள்ளது. தஞ்சையை தொடர்ந்து அடுத்தகட்டமாக சேலத்தில் இந்த திட்டத்தை விரைவில் தொடங்கப்படும் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications