எதிர்காலத்தில் திமுகவுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் -எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.
தஞ்சை: எதிர்காலத்தில் திமுகவுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.விருப்பம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டிய அவர், இளைஞர் படையை வழிநடத்தும் ஆற்றல் அவருக்கு உள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் இந்த பாராட்டு , திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இதனிடையே தமிழ் தேசியம் பேசும் மணியரசன் மற்றும் சீமான் போன்றோர் தனிநபர் மீதான விமர்சனத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். திராவிடம் என்பது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இணைந்தது தான் என்றும் அதில் தமிழ் என்பது தனி அடையாளம் எனவும் குறிப்பிட்டார்.
விமர்சனங்களை திமுக எப்போதும் வரவேற்கும் கட்சி என்றும் சீமானும், மணியரசனும் புலி சின்னத்தை எடுத்து விட்டு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அவர் மீதான விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்கிறார் என்றும் இந்தக் கால இளைஞர்களை விட கூடுதலாகவே அவருக்கு பக்குவம் வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தன்னைப் பொறுத்தவரை திமுகக்கு எதிர்காலத்தில் உதயநிதி தலைமை தாங்குவது இந்த கட்சியின் நலனுக்கு ஏற்றது என்றும் ஏற்கனவே பொதுமக்களிடம் அறிமுகமான நபரை கட்சி பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனிடையே முன்பைக்காட்டிலும் இப்போது அரசியல் முதிர்ச்சியோடு உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு விவகாரத்தையும் அணுகுவது குறிப்பிடத்தக்கது. தனது தாத்தாவும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியை போல் நகைச்சுவை நயம் ததும்ப அவர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சீனியர் கட்சி நிர்வாகிகளை அணுகும் முறையும் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இப்படி அரசியலில் நாளுக்கு நாள் பாடம் கற்று தன்னை தேர்த்தி வருவதால் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
திமுகவில் இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் , இனி அடுத்தடுத்து கட்சியில் உயர்ந்த பதவிகளுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிரது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications