கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாமே தங்கமே! தேர்வு முடிவு பயத்தில் த**லை செய்த மாணவி..ஆனால், ரிசல்ட்டில்?
தஞ்சாவூர்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த மாணவி ஆர்த்திகா தேர்வு முடிவு பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் ரிசல்ட்டில் அவர் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் உறவினர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 7518 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் எட்டு லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்பாகவே இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இந்த ஆண்டு 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இது கடந்த ஆண்டு விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சுமார் 5% மாணவர்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி," தேர்வு முடிவுகள் வந்தவுடன் பெற்றோர்கள் மாணவர்களை அன்போடு நடத்த வேண்டும். அரவணைக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுக்காக மட்டும்தான் வாழ்க்கைக்காக இல்லை. மறு தேர்வில் பார்த்துக் கொள்ளலாம்" என கூறி இருந்தார்.
இந்த நிலையில் தேர்வு முடிவு பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் முடிவுகளை அவர் 400க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்கிறார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே படுகை புது தெருவை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் ஆர்த்திகா, பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தார். தேர்வு முடிந்த நிலையில் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த மாட்டு கொட்டகையில் தனது துப்பட்டாவால் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனடியாக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஆர்த்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே ஆர்த்திகா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவு பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு முடிவு வெளிவந்த நிலையில் ஆர்த்திகா 413 மதிப்பெண்களை மொத்தமாக பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். தமிழில் 72 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்களும், இயற்பியலில் 65 மதிப்பெண்களும், வேதியியலில் 78 மதிப்பெண்களும், தாவரவியலில் 70 மதிப்பெண்களும், விலங்கியலில் 80 என மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் உறவினர்கள் கதறி துடித்து வருகின்றனர்.
மதிப்பெண்கள் படிப்பை மட்டுமே தீர்மானிக்கும். வாழ்க்கையை அல்ல.. மாணவர்களும், பெற்றோர்களும் இந்த நேரத்தில் அரவணைப்போடு இருக்க வேண்டியது அவசியம்..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications