தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் கொள்ளை! 300 சவரன் நகை, ரொக்கம் திருட்டு! என்ன நடந்தது
தஞ்சை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருப்பவர் ஏ.கே.எஸ்.விஜயன். தஞ்சாவூரில் இருக்கும் இவரது வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் சுமார் 300 சவரன் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு போய் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்தது முதலே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருந்து வருபவர் ஏகேஎஸ் விஜயன்.. மாஜி எம்பியான இவர், திமுகவின் மாநில விவசாயச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு தஞ்சாவூரில் உள்ள சேகரன் நகரில் உள்ளது.

தஞ்சை வீட்டில் கொள்ளை
விஜயன் பணி நிமித்தமாக அடிக்கடி டெல்லி செல்லும் நிலையில், இவரது குடும்பத்தினரே இங்குப் பிரதானமாகத் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வெளியூருக்குச் சென்றிருந்தனர். இதற்கிடையே இன்று காலை வீட்டிற்கு வந்த பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். பூட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீடு கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. வீட்டில் இருந்த பணம், நகை என எல்லாவற்றையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர். கைரேகை நிபுணர் சம்பவ இடத்தில் கைரேகைகளையும் சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் அழைத்து வரப்பட்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவரது வீட்டில் இருந்து 300 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை நடத்தவுள்ளனர்.
ஏகேஎஸ் விஜயன்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999 லோக்சபா தேர்தலில் நாகை தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து 2004 மற்றும் 2009 லோக்சபா தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றிருந்தார். 2021 திமுக ஆட்சி அமைந்தபோது விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியின் பொறுப்பாகும். முதல்வர் அல்லது அமைச்சர்கள் அரசு முறை பயணமாக டெல்லிக்குச் செல்லும்போது அலுவல் ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் டெல்லி சிறப்புப் பிரதிநிதியே கவனித்துக் கொள்வார்.. மேலும், திமுகவின் நம்பிக்குரிய நபராகவும் விஜயன் பார்க்கப்படுகிறார்.
-
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications