தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது வீடியோ? சகிக்கவே முடியல.. அரியலூர் மாணவி வழக்கு.. அண்ணாமலைக்கு பிடிஆர் பரபர கேள்வி!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தஞ்சாவூரில் பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. அங்கு உள்ள அரசு உதவி பெறும் ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி ஆசிரியர்கள் சிலர் அந்த மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் ஹாஸ்டலை சுத்தம் செய்ய சொல்லி வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. மேஜிஸ்டிரேட் முன் மாணவி கொடுத்த வாக்கு மூலத்திலும் இதே விஷயம்தான் பதவி செய்யப்பட்டு இருக்கிறது.

கவனிக்க யாருமில்லையா? மருத்துவமனையில் போராடும் வ.உ.சி கொள்ளுப்பேத்தி.. 30 நிமிடத்தில் உதவிய மா.சு! கவனிக்க யாருமில்லையா? மருத்துவமனையில் போராடும் வ.உ.சி கொள்ளுப்பேத்தி.. 30 நிமிடத்தில் உதவிய மா.சு!

அரியலூர் மாணவி

அரியலூர் மாணவி

அரியலூர் மாணவி வழக்கில் பாஜக தொடர்ந்து கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. மத மாற்ற அழுத்தம் காரணமாக அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் அந்த மாணவிக்கு மத மாற்ற அழுத்தம் கொடுத்தது.. அதனால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

அரியலூர் மாணவி வீடியோ

அரியலூர் மாணவி வீடியோ

மரணத்திற்க்கு முன் அந்த மாணவியை வைத்து எடுக்கப்பட்ட வீடியோவையும் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அந்த மாணவி மத மாற்றம் குறித்து பேசியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இன்னொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வார்டன் தன்னை வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

 மத வெறுப்பு பிரச்சாரம்

மத வெறுப்பு பிரச்சாரம்

பொங்கலுக்கு கூட வீட்டிற்கு அனுப்பாமல் வார்டன் தன்னை கொடுமைப்படுத்தியதாக அந்த மாணவி கூறியுள்ளார். இந்த நிலையில்தான் மாணவியின் முழுமையான வீடியோவை வெளியிடாமல் பாதி வீடியோவை மட்டும் கட் செய்து வெளியிட்டுள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. முழுமையான வீடியோவை வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் செய்து இணையத்தில் வெளியிடப்பட்டு அதை வைத்து மத வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகிறது.

Recommended Video

    நீதி கிடைக்காது என்பதால்தான் தஞ்சை பள்ளி மாணவி வீடியோவை வெளியிட்டோம்.. அதில் தப்பில்லை: அண்ணாமலை
     பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    இந்த விவகாரத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அதில், இந்தியா அரசியலின் தரம் நாளுக்கு நாள் குறைந்த வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் மிக தாழ்வான ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் சோகமான வழக்கில் 100 சதவிகிதம் பொய்யான வாதங்களை முன் வைத்து மத பிரச்னையை தூண்ட பார்க்கிறார்கள்.

    மத பிரச்சனை

    மத பிரச்சனை

    எப்படிப்பட்ட நபர் இந்த விஷயத்தை எல்லாம் வைத்து மத பிரச்சனையை தூண்ட பார்ப்பார்? சில சமயம் அரசியலில் தூர் நாற்றம் சகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். அதாவது அந்த மாணவியின் மரணத்தை வைத்து பொய்யான பிரச்சாரம் செய்து மத கலவரத்தை தூண்ட பார்ப்பதாக அண்ணாமலை மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் வைத்து இருக்கிறார். அண்ணாமலை பற்றிய ட்விட்டை ஷேர் செய்து பிடிஆர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார். அந்த மாணவியின் புதிய வீடியோ வெளியான நிலையில் பிடிஆர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

    English summary
    Tanjore girl student issue: Minister PTR Palanivel Thiagarajan responses to BJP Annamalai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X