அத்திக் அகமது கொலை! உ.பி.யில் பாஜகவின் காட்டாட்சியை கலைக்க வேண்டும்! தமிமுன் அன்சாரி ஆவேசம்!
தஞ்சை: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக காட்டாட்சி தர்பார் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அந்த ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பண்டாரவடையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் நேற்று மாலை இஃப்தார் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய அரசின் அலட்சியம் இருந்ததாக கூறுவதும் இது பற்றி எதுவும் பேச வேண்டாம் என பிரதமர் கூறினார் என்றும் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி, சத்யபால் மாலிக் கூறிய மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்காக தற்போது பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 மாத காலக்கெடுவுடன் கூடிய ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. அத்திக் அகமது என்பவர் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்றால் அங்கு எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த அத்திக் அகமது கொலை போன்ற நிகழ்வு இதுவரை வேறு எங்கும் நடைபெற்றதில்லை என்று கூறிய தமிமுன் அன்சாரி, உ.பி.யில் காட்டாட்சி தர்பார் நடப்பதாக குற்றம்சாட்டியதோடு பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆவேசம் காட்டினார்.
பாஜக ஆட்சியில் நீதிமன்ற சுதந்திரம், தேர்தல் ஆணையத்தின் தனித்தன்மை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை ஆகியவற்றின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிமுன் அன்சாரி கூறியிருக்கிறார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications