Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சையில் மாஸ் காட்டிய தமிமுன் அன்சாரி! அணி திரண்ட 725 பொதுக்குழு உறுப்பினர்கள்! 2,000 நிர்வாகிகள்!

கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்க பெரும் கூட்டத்தை திரட்டிய தமிமுன் அன்சாரி.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் மாஸ் காட்டியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

அண்மையில் மஜகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு மத்தியில் ஒரு பெரும் கூட்டத்தை கூட்டி கட்சி தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.

விபி சிங் பெயரில் பல்கலைக்கழகம், கருணாநிதி பெயரில் திருவாரூரில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25 தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளார். அதன் விவரம் வருமாறு;

தேசத்தை காப்போம்

தேசத்தை காப்போம்

தேசத்தை காப்பாற்றும் கடமை ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் இருக்கிறது என்பதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமூகநீதி, மதச்சார்பின்மை, தேச நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என இக்கூட்டம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. தற்போது தமிழக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% இட ஒதுக்கீட்டை 5% சதவீதமாக உயர்த்தி தர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

சிறைவாசிகள் முன் விடுதலை

சிறைவாசிகள் முன் விடுதலை

20 ஆண்டு காலத்தை கடந்து தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் சாதி - மத - வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், முதல் கட்டமாக நோயாளி கைதிகளையாவது முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு

பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பது போல தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

வக்பு சொத்துக்கள்

வக்பு சொத்துக்கள்

நாடு தழுவிய அளவில் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் சட்டப்பூர்வ முயற்சிகளும் தோல்வியை தழுவுகின்றன.இது குறித்து ஒன்றிய அரசு ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, மத்திய வக்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இக் கூட்டம் ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறது.

NIA சட்டத்தில் திருத்தம் தேவை

NIA சட்டத்தில் திருத்தம் தேவை

ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு முகமை (NIA) என்பது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதுடன் , கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக இருக்கிறது .சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்களின கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, மாநில காவல் துறையின் ஒத்துழைப்புடன் மட்டுமே சோதனைகளை நடத்த வேண்டும்.இது தொடர்பான சட்டத்தில் இத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

UAPA சட்டத்தை திரும்ப பெறுக.

UAPA சட்டத்தை திரும்ப பெறுக.

மனித உரிமை மீறல்களையும், கொடும் அடக்குமுறைகளையும் வெளிப்படுத்தி வரும் UAPA சட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என இக்கூட்டம் ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.

கலைஞர் பெயரில் வேளாண் கல்லூரி

கலைஞர் பெயரில் வேளாண் கல்லூரி

திருவாரூரில் முன்னாள் முதல்வர் டாகடர் திரு. கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பெயரில் வேளாண் பல்கலைக்கழகம் ஒன்றை தமிழக அரசு அமைத்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. பெரியாரின் சமூக நீதி கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், தமிழக மக்களின் மீது பேரன்பை காட்டிய முன்னாள் இந்திய பிரதமர் VP.சிங் அவர்களின் பெயரால், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை முன் மாதிரியாக கொண்டு ஒரு பல்கலை கழகத்தை அமைத்திட தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

வட்டியில்லா வங்கி

வட்டியில்லா வங்கி

உலகமெங்கும் வட்டியில்லா வங்கி சேவை முறைகள் வளர்ந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்தியாவிலும் இச்சேவையை வழங்கிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ராகுல் காந்திக்கு பாராட்டு

ராகுல் காந்திக்கு பாராட்டு

இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா) என்ற பெயரில் 150 நாட்களில் 4000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு ஜனநாயக சக்திகளுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் நம்பிக்கையூட்டி இருக்கும் காங்கிரசின் முதன்மை ஆளுமையான திரு ராகுல் காந்தி MP., அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

பரந்தூர் விமான நிலைய விவகாரம்.

பரந்தூர் விமான நிலைய விவகாரம்.

சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் . அவர்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும் தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+