தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவனை பிளஸ் 1 மாணவர்கள் கொன்றது ஏன் – உயிரிழந்தவரின் நண்பன் ஷாக் தகவல்
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் அருகே பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில், பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியில் என்ன நடந்தது, மாணவர்களுக்குள் என்ன பிரச்சனை, பிளஸ் 1 மாணவர்கள் அவரை குறிவைத்து தாக்கியது ஏன் என்று உயிரிழந்த மாணவனின் நண்பர் அதிர்ச்சி தகவல் சொல்லியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு கடந்த சில மாதங்களாகவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம் பள்ளி நிர்வாகம் வரை சென்று, சம்பந்தப்பட்ட மாணவர்களை எச்சரித்துள்ளனர். அதன் பிறகும் மாணவர்கள் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவன் கொலை
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பினரும் கைலப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் 11 ஆம் மாணவர்கள் 15 பேர் இணைந்து, பிளஸ் 2 மாணவர் ஒருவரை கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பிளஸ் 1 வகுப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் நண்பர் ஒருவர் செய்தியாளர்களிடம், "பிளஸ் 1 மாணவர்கள் தான் என் நண்பனை அடித்து கொன்றார்கள். வியாழக்கிழமை சிறப்பு வகுப்பு இருந்ததால் எங்களை மாலை 5.30 மணிக்குதான் விட்டனர். பிளஸ் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லாததால் 4.30 மணிக்கே விட்டுவிட்டனர். இருப்பினும் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் எங்களை அடிக்க திட்டமிட்டு காத்திருந்தனர். நாங்கள் வகுப்பு முடிந்து வெளியே வந்ததும் எங்களிடம் வம்பிழுத்தனர்.
கழிப்பறையில் வெடித்த மோதல்
25 பேர் எங்களை சுற்றி வளைத்து அடித்தனர். உயிரிழந்த எங்கள் நண்பனை கட்டையால் தாக்கினர். சுமார் 10-15 பேர் சேர்ந்து அவனை அடித்தனர். முடிந்தவரை தடுத்துப் பார்த்தோம். எங்கள் மீதும் அடி விழுந்தது. அப்போது திடீரென்று வலிப்பு வந்து கீழே படுத்துவிட்டான். அதைப் பார்த்து அந்த மாணவர்கள் ஓடிவிட்டனர். உடனடியாக அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க சொன்னார்கள்.
அவனின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தோம். அவன் உடல்நிலை மோசமடைந்து இறந்துவிட்டான். 2 வாரங்களுக்கு முன்பு ரெஸ்ட் ரூம் போகும்போது ரேகிங்கில் ஈடுபட்டு இடித்து பிரச்சனை ஆனது. அது அப்போதே முடிந்துவிட்டது. அதில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்துவிட்டனர். அப்போது ஏன்டா இடிக்கிறீர்கள் என்று அவன் தான் அவர்களிடம் கேட்டான். அதனால் அவனை டார்கெட் செய்து அடித்தனர்.
சோகம்
இதுதொடர்பாக ஆசிரியர்கள் அந்த மாணவர்களை கண்டித்தனர். ஆனால் அவர்கள் எங்களை அடித்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் அடித்துவிட்டனர். சம்பவம் நடந்தபோது அங்கு ஆசிரியர்கள் யாரும் இல்லை." என்றார். உயிரிழந்த மாணவனின் தாய் கண்ணீரில் கதறி அழும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications