சாவு இப்படியுமா வரும்.. திடீரென வீசிய பலத்த காற்று.. இளம் பெண்களுக்கு நொடியில் நடந்த துயரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், வளையப்பேட்டை அருகே மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற வள்ளி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சோபனா என்ற பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆடி மாதம் வீசும் காற்று அம்மிக்கல்லையே தூக்கி கொண்டு போகும் என்று சொல்வார்கள். ஆடி மாதம் காற்றுக்காலம் ஆகும்.இந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழையும் தமிழகத்தில் பரவலாக பெய்யும்.

இந்நிலையில் தென்மேற்கு பருவ காற்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பலமாக வீசியது. அப்போது வளையப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வள்ளி என்ற பெண்ணும். சோபனா என்ற பெண்ணும் சென்று கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பலத்த காற்றின் காரணமாக அந்த பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த மரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வள்ளி மீது விழுந்தது.
இதில் வள்ளி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். வள்ளி உடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சோபனா படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடிச்சென்று மரக்கிளையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருத வள்ளி மற்றும் சோபானாவை மீட்டனர்.
இதில் வள்ளி அப்போதே இறந்துவிட்டார். சோபானா மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரம் முறிந்து விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மக்களே இது காற்றுக்காலம் என்பதால் சாலைகளில் கவனமாக சென்று வாருங்கள். பொதுவாக மழை காலங்களில் சாலைகள் மோசமாக இருக்கும்.எனவே இருசக்கர வாகனத்தில் செல்வோர் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்.இரவு நேரங்களில் தெரியாத சாலைகளில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இரவில் தெரியாத சாலைகளில் எங்கு பள்ளம் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. சாலைகளில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்வது பாதுகாப்பானது ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications