பல பெண்களுடன் ஆடையில்லாமல்.. கணவனின் செல்போனை தெரியாமல் பார்த்து.. அரண்டுபோன மனைவி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். தனது கணவர் நிறைய பெண்களுடன் ஆடையில்லாமல் இருக்கும் பட ஆதாரங்களை, தஞ்சை சரக டி.ஐ.ஜி.யிடம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 30 வயதாகும் ஆர்த்தி என்பவர் தனது வழக்கறிஞருடன் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரனை நேற்று நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

Thanjavur: Complaint filed by wife demanding action against husband who has relations with many women

அந்த புகார் மனுவில் ஆர்த்தி கூறியிருந்ததாவது: தஞ்சையை சேர்ந்த நகை மதிப்பீட்டாளாருக்கும் எனக்கும் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி திருமணம் நடந்தது. எங்களுக்கு திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து சென்னையில் உள்ள எனது கணவரின் அக்கா வீட்டிற்கு சென்றிந்தோம். பின்னர் ரயிலில் தஞ்சைக்கு திரும்பி வந்தோம்.

அப்போது எனது கணவரின் செல்போனில் அவரது அக்கா வீட்டில் எடுத்த புகைப்படங்களை அக்காவுக்கு அனுப்ப முயன்றேன். ஆனால் எனது கணவர் பல பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் நிர்வாணமாக பல பெண்களுடன் வாட்ஸ்-அப்பில் பேசும்போது எடுத்த ஸ்கீரின் சாட்கள் ஆகியவை இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், என்னுடைய கணவரிடம் கேட்டபோது வெளியில் கூறினால் தொலைத்து விடுவேன் என எச்சரித்தார். அவரது பெற்றோர்களும் என்னை மிரட்டினார்கள். கர்ப்பிணியான என்னை எனது கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதால் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

இது தொடர்பாக நான் கடந்த மாதம் 27-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அப்போது காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் குறித்து முறையாக விசாரிக்கவில்லை. மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டேன்.

அதன்பின்னர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நான் கொடுத்த ஆதாரங்களை கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் குற்றவாளி தப்பிக்கும் வகையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார். எனவே இது குறித்து விசாரித்து உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு ஆர்த்தி தனது மனுவில் கூறியிருந்தார். இதனிடையே பல பெண்களுடன் ஆபாச உரையாடல், நிர்வாண பட ஆதாரங்களையும் டி.ஐ.ஜி.யிடம் அந்த பெண் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+