தஞ்சாவூர் சாலைக்கு வந்த ராட்சசன்.. பதறியடித்து ஓடிய மக்கள்.. களமிறக்கப்பட்ட வனத்துறை.. ஒரே திக்திக்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கௌர் (Indian Gaur) எனப்படும் காட்டு மாடு நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
தஞ்சாவூரில் உள்ள சுங்கந்திடல், கோடியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டெருமை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாட்டை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், விலங்கை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் ரஞ்சித், இளையராஜா, ரவி, மணிமாறன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கௌர் (Indian Gaur) என்பது உலகின் மிகப்பெரிய காட்டு எருது. இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் அதிகம் காணப்படும் எருது வகை ஆகும்.
இது மிகவும் பெரியதாகவும், பலம் மிக்கதாகவும் இருக்கும். பாகுபலி படத்தில் பல்வாள் தேவன் அடக்கும் காட்டு எருது கிட்டத்தட்ட இதே இந்திய கௌர் (Indian Gaur) தோற்றம் கொண்டது ஆகும். ஆண் கௌர் எருதுகள் 1000 கிலோ வரை எடையுள்ளது.
மிகப்பெரிதாக.. கிட்டத்தட்ட யானையின் முக்கால் அளவில்.. கருத்த உடலுடன், பெரிய கொம்புகளும், வெள்ளை கால்களும் கொண்டது ஆகும் இந்த இந்திய கௌர்.
பொதுவாக இந்திய கௌர் (Indian Gaur) அடர்ந்த காடுகளிலும், மலையிலுள்ள பசுமை நிலங்களிலும் வாழும் விலங்கு ஆகும். இது இந்திய கௌர் (Indian Gaur) என்று அழைக்கப்பட்டாலும் இந்தியா, நேபாளம், மியான்மார் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இது காணப்படும்.
பார்க்க யானை போல.. பெரிதாக, கொடூரமாக இருக்கும் இது மிகவும் ஆக்ரோஷமானது. கோபமானது ஆகும். அதே சமயம் இந்திய கௌர் (Indian Gaur) ஒரு சைவ உண்ணி (Herbivore) என்பதும் குறிப்பிடத்தக்கது. பசுந்தழை, இலைகள், பழங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் குணம் கொண்டது.
இவை தனியாக இருந்தால் மிகவும் ஆபத்து. தனியாக இருக்கும் யானை எப்படி ஆபத்தானதோ அதேபோல் இதுவும் தனியாக இருக்கும் போது ஆபத்து வாய்ந்ததாக இருக்கும். இவை அடிக்கடி குழுக்களாக வாழும். ஆனால் மனிதர்களை அவ்வளவாக தாக்குவதில்லை. அதே சமயம் ஆபத்து வந்தால் மிகுந்த ஆற்றலுடன் தாக்கக்கூடியவை.
சிங்கத்தை தான் காட்டின் ராஜா என்று நாம் கூறினாலும்.. இந்திய கௌர் (Indian Gaur) "காட்டின் மன்னன்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக இந்திய கௌர் (Indian Gaur) எண்ணிக்கை குறைந்து வருகிறது. காடுகளில் இந்திய கௌர் தற்போது குறைவாக காணப்படுகிறது, காடுகள் அழிக்கப்படுவதால் மற்றும் இந்திய கௌர் (Indian Gaur) வேட்டையாடப்படுவதால் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மத்திய, மாநில வனத்துறை சார்பாக இதை (Indian Gaur) பாதுகாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இந்திய கௌர் (Indian Gaur) காட்டு மாடு தஞ்சாவூர் பகுதிகளில் நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications