தஞ்சாவூரே துள்ளுதே.. லுலுவை விடுங்க..தமிழக அரசின் ஸ்வீட் நியூஸ்.. விரைவில் வருது மகிழ்ச்சி அறிவிப்பு
தஞ்சாவூர்: தமிழ்நாட்டிலேயே தஞ்சாவூரில், மாடர்ன் ரைஸ் மில்அமைக்க போவதாக லுலு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் ஒரு முக்கிய அதிரடியை கையில் எடுத்துள்ளது. இது தஞ்சை மாவட்ட இளைஞர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடித்து, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும், அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.
நெற்களஞ்சியம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் ஓனர் யூசூப் அலி, தஞ்சாவூரிலும் பெரிய பிளானுடன் கால் பதிக்க போகிறோம். விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூரில், மிகப்பெரிய மாடர்ன் ரைஸ் மில்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளோம்.. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெரும்" என்று கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, தஞ்சை மக்களும், விவசாயிகளும், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் லூலா குரூப்ஸ்-ன் நிர்வாக இயக்குனர் யூசுப் அலி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு முக்கிய அதிரடியை செய்து வருகிறது.
தரைத்தளம்: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் பட்டி கிராமத்தில் டைடல் பார்க் அமைய போகிறது.. 30.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம், 3 மாடிகள் கொண்ட கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது... தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகளை. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளையும் தொடங்கி வைத்திருந்தார்.
இப்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பார்க் திறக்கப்பட்டால், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாம்.
பூரிக்கும் தஞ்சை: ஏற்கனவே, தனியார் துறை சார்பில் ஏபிஎம் என்ற தனியார் ஐடி நிறுவனம் இங்கு இருந்தாலும், தமிழக அரசின் இந்த மினி டைல் டைடல் பார்க் திறப்பதன் மூலம், இளைஞர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மாவட்டத்தை சேர்ந்த பெண்கள், இந்த ஐடியை சார்ந்து வேலைபார்க்கவும், தஞ்சையின் மினி டைடல் பார்க் பெரிதும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications