தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க..யூரின் போனால் அலாரம் அடிக்கும்.. திறந்தவெளி கழிப்பிடத்துக்கு எண்ட்!
தஞ்சாவூர்: பொது சுவர்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்கள் என பார்க்கும் இடங்களை எல்லாம் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவர்களால் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி கண்டுபிடித்துள்ள ஐடியாவால் இனி திறந்தவெளி பாத்ரூம் நபர்களுக்கு சிக்கல் தான்.
சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களாக இருந்தாலும் சரி, கிராம பகுதிகளாக இருந்தாலும் சரி, சாலையோரங்கள் பொது இடங்கள் பேருந்து நிலையங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நபர்களை தினமும் நீங்கள் பார்த்திருக்கலாம்..

பேருந்து நிலையத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே, பெண்கள் நடக்கிறார்களே, மாணவர்கள் அவதிப்படுகிறார்களே என கவலைப்படாமல் பேருந்து நிலைய சுவர்களை கழிப்பிடம் போல நினைத்து சிறுநீர் கழிப்பவர்கள் திருந்தவே முடியாது.
திறந்தவெளி கழிப்பிடம்:
இதனால் பொதுமக்கள் முகம் சுளித்தாலும் சிறுநீர் கழிப்பவர்கள் அதனை கண்டு கொள்வதும் இல்லை. சிறுநீர் கழிக்காதே, 500 ரூபாய் அபராதம், போலீசில் பிடித்துக் கொடுக்கப்படும் என போர்டு வைத்தாலும் அவர்கள் கண்களில் மட்டுமே அது படாது போல.. இந்த நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் வித்தியாசமான முறையில் யோசித்து திறந்தவெளி கழிப்பிட பிரச்சனைக்கு தீர்வு கண்டு இருக்கின்றனர்.
தஞ்சாவூர் பேருந்து நிலையம்:
திறந்தவெளி கழிப்பிடத்தால் பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு அதிகாரி தான் இந்த ஐடியாவை கொடுத்திருப்பார் போல.. தஞ்சை பேருந்து நிலையத்தில் தான் அந்த வித்தியாசமான ஐடியா செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் முக்கிய நகரமான தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தஞ்சை பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது.
சிறுநீர் கழித்தால் அலாரம்:
பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஏராளமானோர் திறந்தவெளி கழிப்பிடம் போல பயன்படுத்தி வந்ததால் பேருந்து நிலையம் முழுவதுமே சிறுநீர் காடாக காட்சி அளித்தது. தண்ணீரை ஊற்றியும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தும் சுத்தம் செய்தும் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் சிறுநீர் கழிப்பவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை அடுத்து பேருந்து நிலையத்தை சுற்றிலும் சிறுநீர் கழித்தால் அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

பொதுமக்கள் வரவேற்பு:
பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சுவர்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. யாராவது சிறுநீர் கழித்தால் சென்சார் மூலம் அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள். அதே நேரத்தில் இந்த சென்சாரை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம் என்கின்றனர் பொதுமக்கள்..
என்ன செய்யலாம்?:
அதே நேரத்தில் அலாரம் அடித்தால் மட்டும் பத்தாது பிராங்க் வீடியோக்களில் வருவது போல சிறுநீர் கழிப்பவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற வேறு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களை வைத்து சிறுநீர் கழிப்பவர்களின் வீடியோக்களை பேருந்து நிலையத்தில் வைத்து ஒளிபரப்ப வேண்டும் என்கின்றனர் தஞ்சாவூர் நெட்டிசன்கள். எது எப்படியோ அதிகாரிகள் செய்துள்ள இந்த ஏற்பாடுக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பெயருக்கு செயல்படுத்தாமல் தொடர்ந்து அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications