தஞ்சாவூரில் இந்துக்களுடன்.. கார்த்திகை தீபம் ஏற்றி.. ஒற்றுமையை பிரதிபலித்த இஸ்லாமியர்கள்!
தஞ்சாவூர்: திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தஞ்சாவூரில் இந்துக்களுடன் சேர்ந்து இஸ்லாமியர்களும் கார்த்திகை தீபம் விளக்கை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில், உச்சி பிள்ளை கோயிலுக்கு பக்கத்தில் உள்ள தீப மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் கல் தூணில் விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், அது வெறும் கல் தூண் அல்ல, தீப தூண் என்றும் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் உரிமை கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீப தூணில் தீபம் ஏற்ற டிச.1ம் தேதி அனுமதித்து உத்தரவிட்டார். இருப்பினும் ஆண்டு தோறும் தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் டிச.3ம் தேதி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
எனவே, இது குறித்து மீண்டும் ராம ரவிக்குமார் நீதிமன்றத்தில் முறையிட்டார். அவதூறு வழக்காக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டியது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தொழிற் பாதுகாப்புப்படை வீரர்களை அழைத்துக்கொண்டு சென்று ராம ரவிக்குமார் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான இந்துத்துவா அமைப்பினர் ஒன்று கூடினர்.
நீதிமன்றம் உத்தரவிட்டபடி விளக்கேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இது தள்ளு, முள்ளாக வெடித்தது. இதால் காவலர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். எனவே அன்று தீபம் ஏற்ற முடியவில்லை. அடுத்த நாள் இதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீண்டும் விளக்கு ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இப்படி இருக்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக தஞ்சாவூரில், இந்துக்களுடன் சேர்ந்து இஸ்லாமியர்களும் கார்த்திகை தீபத்தை கொண்டாடியுள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டையில், இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து 'தமிழ்நாடு வெல்லும்' என ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடியுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இது குறித்து கூறுகையில், "சகோதர, சகோதரிகளாக எல்லோரிடமும் நாங்கள் பழகிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை வெளிப்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று அவர்கள் எந்த பிரச்சனையை கையில் எடுத்தார்களோ.. அதேபோல நாங்கள் இன்று இஸ்லாமிய சகோதர சகோதரிகளுடன் விளக்கை ஏற்றியிருக்கிறோம். வெள்ளிக்கிழமையன்று இந்த நிகழ்வு தற்போது கொண்டாடப்பட்டிருக்கிறது. இன்று போல என்றும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. மத நல்லிணக்கத்தை உயர்த்தி பிடித்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications