அண்ணாமலைக்கு “டென்சன்”.. தஞ்சாவூரில் தேடப்படும் பாஜகவினர்! இரவு போதையில் சம்பவம் -போலீசிடமே சலம்பல்
தஞ்சாவூர்: பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவின் கைதை தொடர்ந்து, நேற்று இரவு பாஜக நிர்வாகிகள் 3 பேரை அடிதடி வழக்கில் போலீசார் கைது செய்து உள்ள நிலையில், தஞ்சையில் பாஜகவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூரில் மேல அலங்கம் பகுதியில் நள்ளிரவு குடிபோதையில் கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் காட்டு ராஜா அந்த காரை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த காரில் பயணித்த இருவரும் கோபத்தில் காவலை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

அத்துடன் காவலருக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை காவலர் காட்டு ராஜா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ ஆதரத்துடன் இருவர் மீது அவர்கள் புகாரளித்தார். அதன் அடிப்படையில் ஹரிதாஸ், காரல் மார்க்ஸ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
இதற்கிடையே குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்று போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஹரிதாசும் காரல் மார்க்சும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து இருக்கிறது. தங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே பாஜகவை சேர்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மதுரை எம்பி சு வெங்கடேசனை விமர்சித்து பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா வெளியிட்ட அறிக்கையில் அவதூறான தகவலை பதிவிட்டதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல் நிலையத்தில் புகாரளித்து இருந்தது.
அதன் பேரில் வெள்ளிக்கிழமை இரவு அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்ஜி சூர்யா கைதுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுரையில் பாஜகவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை கலைஞர் வெங்கடேசின் மனைவியோடு சேர்ந்து அவரது காலை உடைத்ததாக பாஜகவை சேர்ந்தவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.
மதுரை கோசா குளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினரான சேர்ந்த வைரமுத்து, மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளரான மேல பனங்காடியை சேர்ந்த ஆனந்த் ராஜ், மதுரை செல்லூரை சேர்ந்த பாஜக வார்டு பட்டியல் அணி மண்டல தலைவர் சேர்ந்த மலைச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வைரமுத்து பணம் பெற்றுக்கொண்டு தனது நண்பர்களுடன் இணைந்து வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அளித்த புகாரின்பேரில் பாஜகவை சேர்ந்த 3 பேருடன் வெங்கடேசின் மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருவதும், வழக்கில் சிக்கி வருவதும் பாஜக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications