நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. ஓட்டல் ஊழியர் இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்துக்கொலை
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கண்டியூரில் இரவு டிபன் கடையில் டிபன் கேட்டு தகராறு செய்த குடிபோதை ஆசாமி, அங்கு பணியாற்றிய ஊழியரை இரும்பு கம்பியால் பின்புறமாக தாக்கி கொன்றுள்ளார்.
குடிபோதை ஆசாமி இளையராஜா என்பவரை ஓட்டல் கடை பணியாளர் முகம்மது பாருக்கை கொடூரமாக அடித்து கொலை செய்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடி காட்சி வெளியாகி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கண்டியூரில் டிபன் கடை நடத்தி வருபவர் சாலிப். இவரது தம்பி முகம்மது பாருக் அண்ணனுக்கு உதவியாக கடையில் இருந்துள்ளார்.

சமாதானம்
15ம் தேதி இரவு கண்டியூர் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த இளையராஜா குடிபோதையில் வந்து சாலிப்பிடம் டிபன் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த முகம்மது பாருக் இளையராஜாவை சமாதானம் செய்து அனுப்பி உள்ளார்.

பயங்கரமான அடி
அங்கு இருந்து சென்ற இளையராஜா சிறிது நேரம் கழித்து இரும்பு கம்பியை எடுத்து வந்து நண்பருடன் பேசிக்கொண்டு நின்ற முகம்மது பாருக்கை பின் தலையில் பயங்கரமாக தாக்கினார்.

உயிரிழப்பு
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முகம்மது பாருக்கை இளையராஜா ஆத்திரம் தீர இரும்பு கம்பியால் பயங்கரமாக அடித்துக் கொலை செய்தார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த கொடுர காட்சி அப்பகுதியில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். உயிரிழந்த முகம்மது பாருக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். குடிபோதையில் கொலை செய்த இளையராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications