கோபத்தில் கத்திய கணவன்.. அடுப்பில் கொதித்த வெந்நீரை ஊற்றிய கொன்ற மனைவி.. தஞ்சையில் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை : தஞ்சையில் குடும்ப பிரச்சனையில், கணவனை கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் விவசாயி சின்னையன் வயது 62 .இவருடைய மனைவியின் பெயர் வீரம்மாள் வயது 55. கடந்த 10ஆம் தேதி சின்னையன் -வீரம்மாள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வீரம்மாள் வீட்டில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து சின்னையா மீது ஊற்றி உள்ளார் .இதில் உடல் முழுவதும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் .

கணவன் பலி

கணவன் பலி

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு வீரம்மாளை கைது செய்தனர். குடும்ப பிரச்சனையில், கணவனை கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமி அடித்துக் கொலை

சிறுமி அடித்துக் கொலை

இதனிடையே தஞ்சாவூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொன்று ஆற்றில் வீசப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார்.

அண்ணன் உறவு முறை

அண்ணன் உறவு முறை

இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது தகாத உறவாக மாறியதால் உறவினர்கள் கண்டித்துள்ளனர். வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

படத்தை அனுப்பி கணவன்

படத்தை அனுப்பி கணவன்

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வயது சிறுமியை வெற்றிவேல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல், கல்லணை கால்வாயில் வீசியுள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இருவரும் கைது

இருவரும் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தஞ்சை கல்லணை கால்வாயில் வீசப்பட்ட சிறுமியின் உடல் 20 கண் பாலம் பகுதியில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது இதையடுத்து தீயணைப்பு படையினர் சிறுமியின் உடலை மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+