தஞ்சை மாணவி வழக்கு.. கிறிஸ்துவத்திற்கு எதிராக பாஜக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது- திருமா விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் என்ற பெயரில் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், தமிழ்நாட்டைப் பாதுகாத்திட சனாதன சக்திகளை ஒடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராகச் சட்டமியற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் . தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் தமிழ்நாடு அரசியலை உலுக்கி உள்ளது.

இந்த மாணவி பலியான விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், அறைகளை சுத்தம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

மத மாற்றம் தஞ்சாவூர்

மத மாற்றம் தஞ்சாவூர்

அதே சமயம் இந்த தற்கொலைக்கு பின் மதமாற்றம்தான் காரணம் என்று தமிழ்நாடு பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. அந்த மாணவியை மதம் மாற சொல்லி ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் என்ற பெயரில் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கோரியுள்ளார்.

திருமாவளவன் அறிக்கை

திருமாவளவன் அறிக்கை

இது தொடர்பாக எம்பி திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள உள்ள பள்ளியில் பயின்று வந்த மாணவி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சை மாணவி

தஞ்சை மாணவி

அத்துடன் தமிழக அரசு, தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின்மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், அம்மாணவியின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். மாணவியின் சாவுக்குக் காரணம் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்தது தான் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டைப் பரப்பி, பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கிறிஸ்துவம்

கிறிஸ்துவம்

மாணவியிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட மரண வாக்குமூலத்தில் அவர் தான் பயிலும் பள்ளியின் ஆசிரியை ஒருவர் தொடர்ந்து தன்னைப் பள்ளியின் கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொல்லி கூடுதலாக வேலை வாங்கியதாகவும், விடுமுறை நாட்களிலும் வீட்டுக்குப் போக விடாமல் விடுதியிலேயே இருக்க வைத்ததாகவும், தன்னைத் தொடர்ந்து திட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அங்கிருந்த நஞ்சை தான் அருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

மத வெறுப்பு

மத வெறுப்பு

இந்நிலையில், அவரது தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் காரணம் என்று பொய்யான செய்தியைப் பரப்பி அந்தப் பள்ளிக்கு எதிராக மட்டுமின்றி ஒட்டுமொத்த கிறித்தவ மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் கிறித்தவ மதத்தினருக்கு எதிராக 486 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன எனவும் 2020 ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல்காளைவிட இது 75% அதிகம் எனவும் ' தி யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்' (The United Christian Forum ) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாஜக vs திருமாவளவன்

பாஜக vs திருமாவளவன்

'முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வோம்' என வெளிப்படையாகப் பேசிவரும் சனாதன வெறியர்கள் இப்போது கிறித்தவர்களையும் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்துள்ளனர் என்பதன் அடையாளமே இது. இதைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைக் கெடுப்பதில் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு முதன்மையான பங்கு இருக்கிறது என்பதைப் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. திமுக ஆட்சியின்கீழ் தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமை கொண்ட சனாதன சக்திகள் அதைக் கெடுப்பதற்கு இங்கும் அதே போல மதவாத வெறுப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு பாதுகாப்பு

தமிழ்நாடு பாதுகாப்பு

தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள சனாதன சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் உத்தரப் பிரதேசத்தைப் போல லிஞ்சிங் எனப்படும் ' கும்பல் கொலைகள்' நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி விடுவார்கள் என்பதை கவலையோடும் முன்னெச்சரிக்கையோடும் சுட்டிக்காட்டுகிறோம். இந்தியாவில் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய சட்ட ஆணையம் 2017ஆம் ஆண்டு சட்ட மசோதா ஒன்றைத் தயாரித்து இந்திய ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது.

லிஞ்சிங் அரசியல்

லிஞ்சிங் அரசியல்

பாஜக அரசு அதை சட்டம் ஆக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 153 சி மற்றும் 505 ஏ ஆகிய புதிய பிரிவுகளை சேர்ப்பதற்கான அந்த சட்டத் திருத்த மசோதாவைத் தமிழ்நாடு அரசே சட்டமாக்க முடியும். எனவே, எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி சட்டம் வேண்டும் என்றும் அதன்மூலம் சனாதன சக்திகளின் வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தை முறியடித்துத் தமிழ்நாட்டைப் பாதுகாத்திட வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம், என்று திருமாவளவன் தற்போது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+