அட்வைஸ் செய்த ஆலோசகர்.. சங்கீதா பற்றி வாயை திறக்காத விஜய்.. விவாகரத்து பற்றி பேசலையே.. ஏன்?
தஞ்சாவூர்: இன்று தஞ்சாவூரில் பேசிய தவெக தலைவர் விஜய் தனது மனைவி சங்கீதா பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்து உள்ளார். கடந்த சில நாட்களாக ஊடக வெளிச்சத்தில் தகித்துக் கொண்டிருக்கும் அவரது குடும்பப் பிரச்சனைகள் மற்றும் மனைவி சங்கீதாவின் விவாகரத்து புகார் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

கோட்டை கட்டிய 'தளபதி'... கோட்டை விட்டாரா 'தலைவர்'?
தஞ்சாவூர் அய்யசாமிப்பட்டியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட கூட்டத்தில், 2026 தேர்தலுக்கான வியூகங்களை விஜய் வகுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. "ஸ்டாலினா? விஜய்யா?" என நேரடி சவால்களை வீசியவர், தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் சட்டப் போராட்டத்தை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டார்.
பெண் வாக்காளர்களின் ஆதரவுதான் ஒரு கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்பதை அறிந்தே, "பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்" என்று கடந்த முறை மேடையில் முழங்கினார். ஆனால் இந்த முறை அதையும் தவிர்த்துவிட்டார், நிஜ வாழ்க்கையில் தன் மனைவி முன்வைத்த புகார்களுக்கு அவர் பதில் அளிக்காதது, அவரது 'குடும்பப் பாங்கான' பிம்பத்தை (Family-man Image) பாதிக்குமோ என்ற அச்சம் கட்சி நிர்வாகிகளிடையே மெல்ல எட்டிப் பார்க்க தொடங்கி உள்ளது.
சங்கீதா புகாரால் தனக்கு டேமேஜ் அதிகம் ஆகிவிட்டதை உணர்ந்த விஜய்.. இன்று அதை பற்றியும் பேசவில்லை, பெண்கள் பாதுகாப்பு விவகாரம் பற்றியும் பேசவில்லை. அவரிடம் இருக்கும் அரசியல் ஆலோசகர்கள் கொடுத்த அட்வைஸ்படி அவர் சங்கீதா பற்றி தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சங்கீதா அடுக்கிய சரமாரி புகார்கள்!
சமீபத்தில் செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில் சொல்லப்பட்ட தகவல்கள் கோலிவுட் முதல் கோட்டை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சங்கீதாவின் முக்கிய புகார்கள் இதோ:
துரோகம் மற்றும் ரகசிய உறவு: 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், பலமுறை அவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.
மன ரீதியான சித்ரவதை: அந்த நடிகை தனது சமூக வலைதளங்களில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டபோது, விஜய் அதைத் தடுக்கவோ கண்டிக்கவோ இல்லை. இது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரக் கட்டுப்பாடு: தன்னைத் தனிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தனது செலவுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுத்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமரச முயற்சிகள் தோல்வி: 2021 முதல் 2022 வரை கவுன்சிலிங் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயன்றும், விஜய் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பது சங்கீதாவின் வாதம்.
வியூகமா? பயமா?
விஜய் ஏன் பேசவில்லை? ஒருவேளை மேடையில் இதைப் பற்றிப் பேசினால் அது இன்னும் பெரிய விவாதமாக மாறும் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது, "தனிப்பட்ட வாழ்க்கை வேறு, அரசியல் வேறு" என்பதைத் தனது மௌனத்தின் மூலம் சொல்ல வருகிறாரா?
"நாங்கள் மக்களுக்காக வந்திருக்கிறோம், தனிப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை" என்று தவெக தொண்டர்கள் மார்தட்டினாலும், எதிர்க்கட்சிகள் இந்த 'சங்கீதா விவகாரத்தை' வரும் தேர்தலில் விஜய்க்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர் என்பதே நிதர்சனம்.
தஞ்சையில் அரசியல் பாடம் எடுத்த விஜய், தன் வீட்டுப் பாடத்தில் சறுக்குகிறாரா அல்லது இதுவும் ஒரு 'சைலண்ட்' ஸ்கெட்ச்சா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
-
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..











Click it and Unblock the Notifications