உதயநிதியின் விசிட்.. எகிறும் திமுகவின் நன்மதிப்பு.. அரசியலே பேசாமல் ஏமாற்றம் தந்த தஞ்சை நிகழ்ச்சி
உதயநிதி ஸ்டாலினின் தஞ்சை பயணம் அம்மாவட்டத்துக்கு உற்சாகத்தை தந்துள்ளது
தஞ்சை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலின் வந்து சென்றதால், அம்மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்படைந்து உள்ளது.. மேலும் திருவையாறு எம்எல்ஏ சந்திரசேகரனின் தாயாரின் படத்திறப்பு விழாவில் பங்கேற்றது, திமுகவுக்கான இமேஜை மேலும் உயர்த்தி காட்டி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன்.. இவர் திமுகவில் தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்...
சமீபத்தில் சந்திரசேகரனின் அம்மா துளசியம்மாள் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து, துளசியம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு சந்திரசேகரன் ஏற்பாடு செய்திருந்தார்..

உதயநிதி
தன் சொந்த ஊரான கண்டியூரில்தான் இந்த படத்திறப்பு நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அத்துடன் மேடையில் துளசியம்மாள் படத்தையும் திறந்து வைத்தார்.. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, முதல் முறையாக தஞ்சாவூருக்கு உதயநிதி சென்றிருந்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த பயணம் ஏற்படுத்தியது.

அதிமுக மாஜிக்கள்
அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ளநிலையில், உதயநிதி ஏதாவது அது சம்பந்தமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதேபோல, அதிமுக மாஜிக்களிடம் ரெய்டு முதல் கொடநாடு விவகாரம்வரை பற்றி எரிவதால், அது சம்பந்தமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், உதயநிதி அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை.. மாறாக, "சந்திரசேகரின் கட்சிப் பணிகள் குறித்து எல்லாருக்குமே தெரியும்.. அவரது தாயாரின் ஆசி அனைவருக்கும் எப்போதும் இருக்கும்" என்றார்.

ஏமாற்றம்
இப்படி 2 வரிகள் மட்டுமே பேசிவிட்டு உதயநிதி உடனே கிளம்பி சென்றதால், நிகழ்ச்சியில் ஒருவித ஏமாற்றம் கவ்வியது. இத்தனைக்கும் உதயநிதி வருவதை அறிந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அதேசமயம், உதயநிதியின் இந்த தஞ்சை விஜயமானது, அம்மாவட்ட இளைஞர் அணிக்கு புது தெம்பை ஏற்படுத்தி வருகிறது.. அதுமட்டுமல்ல, ஒரு எம்எல்ஏ-வுக்கு திமுக மேலிடம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதும், குறிப்பாக சந்திரசேகரன் மீது வைத்துள்ள நன்மதிப்பும் இதன்மூலம் தெரியவருகிறது...!

படத்திறப்பு விழா
ஆனால், இந்த முறை திமுக ஆட்சி அமைத்ததுமே, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவர், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அன்பழகன், திருவையாறு - துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் அமைச்சராவார்கள் என்கிற ஒரு எதிர்பார்ப்பு இருந்து நிலவி கொண்டே இருந்தது. ஆனால், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 2 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்..

மாவட்டம்
அதாவது, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கருணாநிதி பிறந்த மாவட்டத்தில் ஒருவர் கூட அமைச்சராக இல்லாதது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை தந்துள்ளது என்று ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில், இனி அடுத்தடுத்து வரும் காலங்களில் இம்மாவட்டத்துக்கான முக்கியத்துவம் தரப்படலாம் என்றும் நம்பிக்கையான தகவல்கள் கூறுகின்றன..!












Click it and Unblock the Notifications