குரு பகவான் கோயிலான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!
தஞ்சாவூர்: குரு பகவானின் ஸ்தலங்களில் ஒன்றான ஆபத்சகாயேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு முறையும் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆலங்குடியில் உள்ளது குருபகவான் கோயில். அல்லது ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இந்த கோயில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இந்த கோயிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என தெரியவில்லை.

ஆனால் ரூ 5 கோடி மதிப்பில் கோயிலின் தொன்மை மாறாமல் இருக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் எனப்படும் யுனெஸ்கோ இந்த கோயிலில் திருப்பணிகள் நடத்தி புதுப்பித்தமைக்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள துக்காச்சியில்தான் இந்த கோயில் இருக்கிறது. இங்கு ராஜராஜசோழனின் 7ஆம் ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. நவக்கிரக கோயில்களை பார்வையிடும் மக்கள் இந்த கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக உள்ளனர். குரு பார்க்க கோடி நன்மை... சும்மாவா சொன்னார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications