அங்கேயும் இருக்கு! இங்கேயும் இருக்கே! சீமான் பேச்சை விஜய் காப்பி? ஆதாரத்துடன் வந்த நாதக தம்பிகள்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பழைய பேச்சை காப்பியடித்து பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் நா.த.க.வினர் கிண்டலுடன் பரப்பி வருகின்றனர்.

தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அப்போது விவசாயிகள் குறித்து பெருமிதத்துடன் பேசிய அவர், "ஒரு டாக்டர் இருக்காருன்னா, உடம்பு சரியில்லைன்னா அவர் ஞாபகம் வரும். அதே மாதிரி பிரச்சனைன்னா வக்கீலைத் தேடிப்போவோம்.

vijay seeman

ஆனால், சாப்பிடும்போதுகூட நம்மை அறியாமல் ஒருவரை நினைத்து நன்றி சொல்வோம். அந்த மனிதர்... விவசாயி... விவசாயி... விவசாயி. இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது கடவுள்னு சொல்வாங்க.

அந்த கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.

இதே கருத்துகள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'கடைசி விவசாயி' திரைப்பட விருது விழாவில் சீமான் பேசியதுடன் ஒத்துப்போவதாக நா.த.க.வினர் சுட்டிக் காட்டியுள்ளனர். சீமான் அப்போது, "ஒரு மனிதன் தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் வழக்கறிஞரை சந்திக்கிறான். என்றாவது ஒரு நாள் பொறியாளரை சந்திக்கிறான். என்றாவது ஒரு நாள் மருத்துவரை சந்திக்கிறான். ஆனால், ஒரு நாளைக்கு மூணு வேளையும் விவசாயியை சந்திக்கிறான். உலகில் எல்லாரும் மனிதர்கள் செய்யும் தொழிலை செய்கின்றனர்.

விவசாயிகள் மட்டும் தான் தெய்வத்தின் தொழிலை செய்கின்றனர். உழவு இல்லை என்றால் உணவு இல்லை, உணவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை, உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை" என்று பேசியிருந்தார்.

இந்த ஒற்றுமையை யூடியூப் வீடியோவுடன் நா.த.க.வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதால், இரு கட்சியினரிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. விஜய் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், "நான் வேலூர் கூட்டத்தில் பேசும் போது சொல்லியிருந்தேன். தமிழகம்தான் விஜய், விஜய்தான் தமிழகம் என்று! தமிழக மக்களின் ஒரே பிரதிநிதியாக உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும்தான் இருக்கிறோம்.

அதனால்தான் அப்படி சொன்னேன். விஜய் வெர்சஸ் ஸ்டாலின் சார் என்று சொன்னேன். ஏன் டெல்லிக்கும் தமிழகத்திற்குமான தேர்தல் என்று சொல்கிறீர்களழ் என கேள்வி கேட்டிருந்தேன். உடனே விஜய், பாஜகவுக்காக பேசுகிறார் என திரித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். நமது சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலையை செய்கிறார்கள். இனிமேல் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.

ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சின்னப்பசங்கலாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை டெல்லி அணியால் தொட்டு கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டிலும் விசில் போடுவது தமிழகம்தான் சிஎஸ்கே, வர போகும் தேர்தலில் விசிலை போட போவது நமது தவெகதான்.

கடவுளுக்கே படையல் போடுபவர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விவசாயிகளை பற்றி எனக்கு தெரியாது. ஒத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரன் என சொல்லி உங்கள் காதில் டால்டா ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயம் குறித்து தெரியவில்லை என்றாலும் அவர்கள் படுகிற கஷ்டம் எனக்கு தெரியும். இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+