தஞ்சை கல்லணை கால்வாயில் இரவில் மனைவியுடன் குளித்த கணவன்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த அந்தோணி ஜேசிபி ஆபரேட்டர் ஆவார்.இவர் தனது மனைவி பேபி ஷாலினி உடன் பூதலூர் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை கேட்காமல் குளித்தார்களாம். இந்நிலையில் மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் 3 கிமீ தூரம் தள்ளி இன்று காலை மீட்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதி வழியாக செல்லும் கல்லணை கால்வாய், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையிலிருந்து பிரிந்து, பாசனத்திற்காக நீரை கொண்டு செல்லும் ஒரு முக்கிய கால்வாய் ஆக இருக்கிறது. இந்த கால்வாய் தான் காவிரி நீர் பாய்ந்தோடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2.25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது. கல்லணை கால்வாய் என்பது தஞ்சாவூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆறு என சொல்லலாம். இந்த கால்வாய் பல 100 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.

இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த சூழலில் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சின்ன காங்கேயம் பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் அந்தோணிக்கு 40 வயது ஆகிறது.இவர் ஜேசிபி ஆபரேட்டர் ஆவார். இவரது மனைவி பேபி ஷாலினி (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் பூதலூர் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் அந்தோணி மற்றும் பேபி ஷாலினி இருவரும் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதில் அந்தோணி ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து கதறி துடித்த பேபி ஷாலினி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இருப்பினும் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட அந்தோணியை யாராலும் மீட்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் வெளிச்சம் போதாமல் ஆற்றில் அந்தோணியை தேட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் பூதலூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் சித்திரக்குடி பாலம் பகுதியில் அந்தோணி உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications