முருகனின் திருவிளையாடல்.. வெள்ளை மயில் ரொம்ப க்யூட்.. பக்தி பரவசத்தில் தஞ்சாவூர் மக்கள்
தஞ்சாவூர்: வெள்ளை நிற மயில் ஒன்று தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை அடுத்த கல்லணை ஆற்றங்கரையில் தென்பட்டது. ரொம்ப க்யூட் என்று மகிழ்ந்த மக்கள் அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இதில் வெள்ளை நிற மயில் என்றால் இன்னும் சிறப்பு.

முருகப்பெருமானின் வாகனமாக முருக பக்தர்களால் மயில் வணங்கப்படுகிறது. முருகனின் வேலில் இருந்து தப்பிப்பதற்கு சூரபத்மன் பல வடிவங்களை எடுத்தான். திருச்செந்தூரின் அருகில் உள்ள மாப்பாடு என்னும் மாந்தோப்பில் மாமரமாக இருந்த சூரபத்மனை முருகனின் வேல் இரண்டாக பிளந்தது. சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகனின் கொடியாகவும், வாகனமாகவும் மாறின.
பறவைகளில் மிக அழகானதும், சாதுவானது மயில். சூரபத்மன் அசுர குணத்தோடு இருந்தாலும் முருகனிடம் வந்ததும் சாந்தமானதைப் போல, முருகப் பெருமானை வழிபடக்கூடிய பக்தர்கள் அவரை சரணடையும் போது மன அமைதியும், சாதுவாகவும் மாறி வாழ்க்கையில் நிம்மதி அடைகின்றனர்.
உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போன்று கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.
முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். ஆனால் கொல்லப்படுவதில்லை. காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் ஒருவனுடைய அகந்தையை உணர்த்துகின்றது. விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.
வெள்ளை நிற மயில்கள் மன அமைதியை உணர்த்துகிறது. தஞ்சாவூரில் கல்லணை ஆற்றங்கரையில் தென்பட்ட மயிலைக் கண்ட மக்கள் இது முருகப்பெருமானின் திருவிளையாடலா என்று கூறி வணங்கியதோடு க்யூட்டான அந்த மயிலை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். கந்த சஷ்டிக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் அரோகரா முழக்கத்தோடு வணங்கி பரவசமடைந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications