அப்ப தான் கேட் கிட்ட வந்தார்.. திடீர்னு ஓடிப்போய்.. திமுக பிரமுகர் செய்த காரியம்.. ஷாக்கில் தஞ்சாவூர்
தஞ்சாவூர்: ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்த திமுக பிரமுகர் செய்த காரியத்தை பார்த்து, தஞ்சாவூரே திகைத்து விட்டது.. போலீசார் இதுகுறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் தெற்குவீதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்.. இவரது மகன் பாலா என்ற பாலசுப்பிரமணியன்.. 44 வயதாகிறது.

திருவோணம் பேரூர் திமுக செயலாளராக பதவி வகித்து வந்தவர்.. இவரது மனைவி பெயர் நந்தினி.. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.. இவர் அந்த பகுதியில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
அத்துடன் ஏலச்சீட்டும் நடத்தி வந்திருக்கிறார்.. ஆனால், கொரோனா பரவலின்போது, லாக்டவுன் சமயத்தில் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளார்.. தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளது.. அவர் நடத்திவந்த ஏலச்சீட்டிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. கொரோனாவுக்கு பிறகு நிலைமை சீராகும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், பாலாவால் பழையபடி லாபம் ஈட்டமுடியவில்லை.. இதனால் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்..
ஒருபக்கம் நஷ்டம், மறுபக்கம் கடன்காரர்கள் தொல்லை என நாளுக்கு நாள் மனஉளைச்சலுக்கு ஆளானார்.. இறுதியில், உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.. தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்த நிலையில், நேற்றிரவு திருநாகேஸ்வரம் ரயில்வே கேட் பகுதிக்கு சென்றிருக்கிறார் பாலா. அந்த நேரம் பார்த்து, அவ்வழியாக அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.. கேட் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாலா, திடீரென்று அந்த ரயில் முன்பு ஓடிப்போய் விழுந்தார்..
இதில், உடல் சிதறி அங்கேயே இறந்துவிட்டார்.. இந்த தற்கொலை குறித்து கும்பகோணம் ரயில்வே இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளர் டி.சிவராமன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக செயலாளர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அந்த மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications