தஞ்சாவூரில் குபீர்னு வந்த "உறுப்பு".. மிஸ்ஸான நபர்.. ஓரினச்சேர்க்கை மேட்டர் வேற.. திணறுது கும்பகோணம்
தஞ்சாவூர்: தோண்ட தோண்ட உறுப்புகள் கிடைத்து வருவதால், கும்பகோணமே ஆடிப்போயிருக்கிறது.. அந்த டுபாக்கூர் நாட்டு வைத்தியர் வீட்டில் என்ன நடந்தது?
கடந்த 2 நாட்களாகவே கும்பகோணம் கொலை சம்பவம் பெருத்த அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. கும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம்மணல்மேடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் அசோக் ராஜன்.. 27 வயதாகிறது..

சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர்.. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்தபோது, திடீரென அசோக்கை காணவில்லை.. எனவே, சோழபுரம் போலீஸில் குடும்பத்தினர் புகார் கொடுக்கவும், போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.
அப்போதுதான், சித்த வைத்தியரான கேசவமூர்த்தி(47) என்பவருடன், அசோக் ராஜன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. உடனே கேசவமூர்த்தியை பிடித்து விசாரித்தால், அசோக்கை வெட்டிக்கொன்று வீட்டிற்கு பின்பக்கம் புதைத்துவிட்டதாக சொன்னார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கேசவமூர்த்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
சுன்னத்: இந்த கேசவ மூர்த்தி அந்த பகுதியில் நாட்டு வைத்தியர்.. இருந்து வருகிறார்.. ஆனால், இவர் ஒரு போலி டாக்டர்.. முறைப்படி எதுவும் படிக்கவில்லை.. அரைகுறை வைத்தியத்தை வைத்தே, அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத் செய்துள்ளார்.
அசோக் ராஜனுக்கும்சுமீபத்தில் சுன்னத் செய்திருக்கிறார்.. இதனால், அசோக்குக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால், கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு, இதை பற்றி கேட்கவும், தீபாவளிக்கு ஊருக்கு வரும்போது, தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கேசவமூர்த்தி சொல்லி உள்ளார்.
போலி டாக்டர்: அதன்படியே, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியிடம் அசோக் சென்றுள்ளார்.. அப்போது, அசோக்குக்கு சுன்னத் செய்தபோது, தவறான சிகிச்சை நடந்தது உறுதியானது. உடனே, தன்னை பற்றி வெளியில் சொல்லிவிடுவாரோ என்று சேகவமூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. அதுமட்டுமல்ல, கேசவமூர்த்தி ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளவராம்..
தன் வீட்டுக்கு வந்த அசோக்கிடம் ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. இதற்கு அசோக் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே தவறான சிகிச்சை செய்து மாட்டிக் கொண்ட நிலையில், ஓரின சேர்க்கை விஷயத்தையும் அசோக் வெளியில் சொல்லிவிடுவாரோ என்று பயந்துள்ளார் நாட்டு வைத்தியர். அதனாலேயே, அசோக்கை துண்டு துண்டாக வெட்டி கொன்றதாகவும் வாக்குமூலம் தந்தார்.
வாக்குமூலம்: இதுகுறித்து அவர் போலீசில் சொன்னபோது, "அசோக்ராஜனுடன் நான் தன்பாலின உறவு வைத்துக்கொண்டேன்.. கடந்த 13-ம் தேதி என் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்தார். அப்போது தன்பாலின உறவுக்கு அவரை அழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.. அப்போது அவருக்கு நீண்ட நேரப் பாலியல் உறவுகொள்ள வீரியம் மிக்க மருந்து ஒன்றை அவருக்கு தந்தேன். மது போதையில் இருந்த அவரது உடல், அந்த மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.. எனவே, உடனே இறந்துவிட்டார்.
உடனே அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, என் வீட்டுக்குப் பின்புறம் உள்ள பாத்ரூமில் குழி தோண்டிப் புதைத்துவிட்டேன் என்று கூலாக சொன்னதை கேட்டு, போலீஸார் அதிர்ந்துபோனார்கள்.
அதுமட்டுமல்ல, யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அசோக் எழுதுவதை போலவே ஒரு கடிதம் எழுதினாராம் நாட்டு வைத்தியர்.கடிதம்: அதில், "அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவதால் சோழபுரத்தை சேர்ந்த கேசவமூர்த்தி என்ற வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்.. ஒருவேளை, நான் இறந்து விட்டால் யாரும் கவலைப்பட வேண்டாம்" என்று எழுதி கையெழுத்து போட்டு, அதை அசோக்குமார் குடும்பத்துக்கு கிடைக்கும்படி, போஸ்ட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆனால், அதிலுள்ள கையெழுத்தை பார்த்துவிட்டு, அது அசோக் எழுதியது கிடையாது என்று போலீசுக்கு போயிருக்கிறார்கள் குடும்பத்தினர். அப்போதுதான், போலி டாக்டர் வசமாக சிக்கியிருக்கிறார்.
உடல் உறுப்புகள்: அதற்கு பிறகு, வீட்டின் பின்பக்கம் பள்ளத்தை தோண்டி பார்த்தபோது, அசோக்கின் உடல் உறுப்புகளை காணவில்லை. இதனால் பதறிப்போன போலீசார், கேசவமூர்த்தி வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஒரு பெட்டியில் சில எலும்புகள் இருந்துள்ளன.. இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த போலீசார், கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி தோண்ட ஆரம்பித்தனர். அப்போது, ஏராளமான எலும்புகள் கிடப்பதை கண்டு உறைந்து போனார்கள்.
அசோக் போலவே, மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தார்கள்.. முதலில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது.. அப்போததான் அது கடந்த ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன அனாசின் என்பவரது மண்டை ஓடு என்பது உறுதியானது..
அப்படியானால், இன்னும் எத்தனை நபர்களை கேசவமூர்த்தி செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.. எத்தனை பேர் ஓரின சேர்க்கையால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை..
உடல்கள்: எனவே, நேற்றுகூட தஞ்சை மாவட்ட எஸ்பி முன்னிலையில், உடல்கள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இன்றும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சித்த வைத்தியரின் வீட்டின் பின்புறம் முழுக்கவும் தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உறுப்புகள் ஒவ்வொன்றாக கிடைத்து வருவதால், கொலை எண்ணிக்கை அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது..!!
இந்த போலி டாக்டர் கேசவமூர்த்திக்கு கல்யாணமாகிவிட்டதாம்.. அதுவும் 2 மனைவிகள் இருக்கிறார்கள்.. ஆனால், 2 பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து போய்விட்டதாக சொல்கிறார்கள். கேசவமூர்த்தி எப்போதுமே, இளைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களுடன் உறவு கொள்வாராம். அப்படித்தான் அசோக்கிடமும் பழகியிருக்கிறார்.
தவறான உறவுகள்: இதுபோல் பலரிடம் கேசமூர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. கேசவமூத்தியுடன் பழகிவந்த இளைஞர் ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு காணாமல்போனார். அவரது நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. இப்போது, ஒரு மண்டை கிடைத்துள்ளதால், அந்த நபர்தான் காணாமல் போனவரா? என்றும் தெரியவில்லை.
இதுகுறித்தெல்லாம் இனிமேல்தான் போலீசார் உண்மைத்தன்மையை வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுதானே தீருவான்.. இதோ இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் "டாக்டர்"..!!!
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications