Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டுக்கோட்டை பாஜக நிர்வாகி சரண்யாவின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை ஏன்? விசாரணையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் சரண்யா தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது ஏன் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த கொலை தொடர்பாக 3 பேர் சரணடைந்துள்ளனர்.

Pattukottai Saranya

பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார்.

இவருக்கும் மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணமாகி சாமுவேல் (15), சரவணன் (13) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் உயிரிழந்துவிட்டார். இதனால் சரண்யா, பட்டுக்கோட்டை தாலுக்கா கழுகபுலி காடு கிராமத்தை சேர்ந்த பாலன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குழந்தைகளுடன் உதயசூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் ஜெராக்ஸ், டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாலன், கடையை பூட்டிக் கொண்டு இரு சக்கரவாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அது போல் சரண்யாவும் தனது கடையை பூட்டிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் வந்து சரண்யாவின் வாகனத்தை மடக்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோட முயற்சித்த போது அவரை கழுத்து, தலையின் பின்பக்கம் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டனர். இதனால் அவரது தலை துண்டிக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டனர். உடனே வாட்டாத்திகோட்டை போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சரண்யா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன், குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்தனர்.

இந்த நிலையில் அந்த 3 பேரையும் குற்றம் நடந்த இடத்திற்குள்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதற்காக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+