தஞ்சை அரசு மருத்துவமனைக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி சர்ச்சைகள்.. கவனிப்பாரா அமைச்சர் மா.சுப்ரமணியன்?
தஞ்சை: பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவனக்குறைவாக வழங்கப்பட்ட சிகிச்சையால் அந்த பெண் உயிரிழந்ததாக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து சர்ச்சைகளிலும், புகார்களிலும் சிக்கி வரும் தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உரிய பராமரிப்பின்றி இருந்த இந்த மருத்துவமனைக்கு அண்மையில் நடிகை ஜோதிகா தனது சொந்த நிதியை கொடுத்து மகப்பேறு வார்டுகளை புனரமைத்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இளங்கார்குடியை சேர்ந்தவர் விஜயகுமாருக்கும், நெடுந்துறையை சேர்ந்த லட்சுமி என்பவருக்கம் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2019-ம் ஆண்டு பாபநாசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமான லட்சுமி, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பிரசவத்திற்காக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

சிசேரியன்
அன்று இரவே லெட்சுமிக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் லட்சுமிக்கு மஞ்சள் காமாலை இருப்பதால், உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 17 நாட்கள் லெட்சுமி தஞ்சை இராசாமிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவரது உறவினர்கள் லட்சுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வலு கட்டாயமாக
லெட்சுமி வீட்டிற்கு வந்த மறுநாளே, அதாவது 18-ம் தேதி DMCHO ஜாக்குலின் உத்தரவின் பேரில், வீரமாங்குடி செவிலியர் திலகவதி மற்றும் பண்டாரவடை செவிலியர் புவனேஸ்வரி இருவரும் ஆம்புலன்ஸ் வேனுடன், லெட்சுமியின் வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் வந்து சேருமாறு கூறியுள்ளனர். அப்போது லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மறுக்கவே, காலை 10 மணிக்கு வந்த செவிலியர்கள் இரவு 11 மணி வரை அவர்களுடன் பேசி இரவு 11 மணிக்கு மேல், உங்கள் மனைவிக்கு எதுவும் ஆகாது. அதற்கு நாங்கள் பொறுப்பு என கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு அவர்களை அழைத்து சென்றுள்ளனர்.

உயிரிழப்பு
அழைத்து செல்லப்பட்ட லட்சுமி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி சிகிச்சை பலனின்றி கடந்த 22-ம் தேதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த லட்சுமியின் உடலைப் பெறுவதற்கு முன்பு கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வலுக்கட்டாயமாக லட்சுமியின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை,மேலும் நீதிமன்றம் செல்லமாட்டோம் என எழுதி வாங்கி கொண்ட பிறகுதான் உடலை ஒப்படைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

உரிய பதில் இல்லை
இந்நிலையில் ஏன் வலுகட்டாயமாக எழுதி வாங்கினார்கள் என உறவினர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்ததால், லட்சுமியின் மருத்துவ அறிக்கைகளை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் காண்பித்துள்ளனர். அப்போது அதனை பார்த்த தனியார் மருத்தவமனை மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ ஊசி போல் பொருட்களை வைத்து தையல் போடப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

விசாரணை தேவை
மேலும் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் தரும்படி அரசு மருத்துவமனை மருத்தவர்கள் கேட்பதாக கூறுகின்றனர். எனவே லெட்சுமியின் இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு நஷ்டஈடு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

நடிகை ஜோதிகா
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், கோயிலுக்கு வழங்கப்படும் தொகையை, மருத்துவமனைக்கு கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் நடிகை ஜோதிகா பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக அப்போது பேசப்பட்டது. நடிகை ஜோதிகா பேசியது போல், தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

மக்கள் கோரிக்கை
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு, பாதுகாப்பை மீறி குழந்தை கடத்தல், உரிய பராமரிப்பு இல்லை என தொடர்ந்து புகாரில் சிக்கி வரும் தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது சுகாதாரத்துறை அமைச்சர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தஞ்சை மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications