Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சாவூரில் இளம்பெண் கேட் கீப்பரின் அசத்தல்.. ரயில் வந்துக்கிட்டே இருக்கு.. கேட்டை திறக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகியில் உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென இரவு நேரம், உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.. ஆபத்தான நிலையில் அவரது உறவினர்கள் ஒரு பைக்கில் ஏற்றி சென்றபோது, வழியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.. அப்போது நடந்த இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ரயில்வே கேட் கீப்பர் லெவல் கிராசிங்கில் மனித உயிர்களின் பாதுகாப்புக்கு முழுமையாக பொறுப்பானவர்... ரயில் வருவதற்கு முன்பு, போக்குவரத்தை நிறுத்தி கேட்டை முறையாக மூடுவது அவரது முதன்மை பணியாகும்..

Woman Gatekeeper Thanjavur Train Railway Incident

ரயில்வே கேட் கீப்பர்

ரயில் கடந்து செல்லும் வரை யாரும் தடையை மீறாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும். ரயில் சென்ற பிறகு பாதை பாதுகாப்பானது என உறுதி செய்த பிறகே கேட்டை திறக்க வேண்டும்... கேட் திறப்பு-மூடல் மற்றும் ரயில் விவரங்களை பதிவேட்டில் துல்லியமாக பதிவு செய்வதும் அவரது கடமையாகும்..

ஏதேனும் கோளாறு அல்லது அபாயம் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறக்க முடியாத கடலூர்

ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் புறப்படும் முன்பு, அந்த ரயில் நிலைய மேலாளர், சம்பந்தப்பட்ட கேட் கீப்பருக்கு இந்த எண்ணுள்ள ரயில் புறப்படுகிறது என்று தகவல் தெரிவித்து கேட்டை மூடச்சொல்வார்.

இதற்கென்று பிரத்தியேக தொலைத்தொடர்பு வசதி செய்யப்பட்டிருக்கும். இந்த தொலைத்தொடர்பை பயன்படுத்தியே ரயில்களின் இயக்கம் குறித்த தகவல்கள் பரிமாறப்படும்.

இவ்வளவு வசதிகள் செய்து தந்தும்கூட பல இடங்களில் ரயில் விபத்துகள் நடப்பது கவலையை தருகிறது.. சமீபத்தில் கடலுார் அருகே 3 மாணவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக, கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.. விதிகளை மீறியதால் அவரை பணியிடை நீக்கம் செய்ததாக தெற்கு ரயில்வே காரணம் வெளியிட்டிருந்தது.

அந்தவகையில் கடமை தவறாமல் பணியாற்றுவது மிகப்பெரிய விஷயம்.. அதிலும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது அதைவிட முக்கியமான பண்பாகும்.. அப்படி ஒருசம்பவம்தான் தஞ்சாவூரில் நடந்துள்ளது..

தஞ்சாவூர் லெவல் கிராசிங்

தஞ்சாவூர் மாவட்டம், பின்னவாசல் - சித்தாதிக்காடு கிராம பகுதி ரயில்வே கேட் கீப்பராக இளம்பெண் அருள்ஞானடெல்பின்... இவருக்கு வயது 29 ஆகிறது.. இவர், ஜனவரி 3ம் தேதி பணியில் இருந்தபோது, இரவு, 7:45 மணிக்கு, ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக, ரயில்வே கேட்டை மூடியுள்ளார்.

அப்போது, பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பைக்கில் பேராவூரணியில் உள்ள மருத்துவமனைக்கு, அவரது உறவினர்கள் கொண்டு செல்ல முயன்றனர்.

ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால், அருள்ஞானடெல்பினிடம், கேட்டை திறந்து உதவுமாறு கூறி, உறவினர்கள் கூச்சலிட்டனர். அப்போது, அருள்ஞானடெல்பின், "ரயில், ஆயிங்குடியை கடந்துவிட்டது. கேட்டை திறக்க முடியாது" என திட்டவட்டமாக மறுத்தார்.

ஒரு உயிரை காப்பாத்தணும்மா

அதற்கு உறவினர்கள், "ஒரு உயிரை காப்பாத்தணும்மா..." என்று சொல்லவும், கேட் கீப்பரான இளம்பெண் ஸ்டெலிபினோ, "என்னை நம்பி பல உயிர்கள் ரயிலில் வருது... என் பைக் அந்த பக்கம் நிற்குது... அதை எடுத்துக்கிட்டு மருத்துவமனை போங்க.. ரயில் ஆயிங்குடியை தாண்டிருச்சுண்ணா கேட் திறக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

உடனே உறவினர்கள் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு தண்டவாளத்தை கடந்து கேட் கீப்பரின் பைக்கில் செல்தற்குள், அவர்களின் உறவினர் ஒருவர் பைக்கில் வந்ததும் அந்தப் பைக்கில் தூக்கிச் சென்றனர். தற்போது அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

Woman Gatekeeper Thanjavur Train Railway Incident

கேட் கீப்பருக்கு பாராட்டு

அந்த இளம்பெண்ணான கேட்கீப்பருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. ஒருவருக்காக கேட் திறந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை அந்த பெண் நன்றாக உணர்ந்துள்ளார்.. என்று நெகிழ்ந்து வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்..

கடமையும் தவறாமல், மனிதாபிமானத்தோடு தன் வாகனத்தை கொடுத்து உதவிய இளம் ரயில்வே கேட் கீப்பரின் செயலை ரயில்வே நிர்வாகிகள் பாராட்டி வருகின்றனர்.

ஆதனூரை சேர்ந்த இளம்பெண்தான் இந்த கேட் கீப்பர்.. இவரது தாத்தா கேங்மேன் பணியில் இருந்தவர்.. இவரது அப்பா அன்பானந்தம், பெரியப்பா அந்தோணிராஜ் ஆகியோர் கேட் கீப்பர் பணியில் இருந்தவர்கள்.. அந்த குடும்பமே ரயில்வேயில் வேலை செய்தவர்கள்... அந்த வரிசையில்தான் ஸ்டெலிபினும் இப்போது கேட் கீப்பராக உள்ளார்..

எனினும், பெண் கேட் கீப்பருக்கு பாதுகாப்பு வேண்டும், இரவு பணிகளை தவிர்க்க துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+