ஷாக் சம்பவம்.. 3 பிள்ளைகளின் கண் முன்பாகவே தாய், கள்ளக்காதலன் வெட்டி கொலை..!
பண தகராறில் பெண் உட்பட 2 பேர் வெட்டி கொல்லப்பட்டனர்
Recommended Video
தஞ்சை: 3 பிள்ளைகள் கண்முன்னாடியே, வனிதாவையும், அவரது கள்ளக்காதலனையும் வெட்டி கொன்று தப்பிவிட்டது ஒரு கும்பல்! இன்று காலை நடந்த இந்த இரட்டை கொலை சம்பந்தமாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த தம்பதி காமராஜ் - வனிதா. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் பிள்ளைகள். காமராஜ் ஒரு அரசு ஊழியர்.
ஆனால் 6 வருஷத்துக்கு முன்பே இறந்துவிட்டார்.. இதனால் வனிதாவுக்கு இந்த அரசு வேலை கிடைத்தது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்தார்.

கள்ளக்காதல்
இந்த சமயத்தில், கனகராஜ் என்பவருடன் வனிதாவுக்கு கள்ளக்காதல் மலர்ந்தது.. இதனால் வீட்டுக்கு வந்து சென்று போய் கொண்டிருந்தார் கனகராஜ்.. ஒருமுறை வனிதா, தன் அக்கா மகன் பிரகாஷிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதில் ஒன்றரை லட்சத்தை திருப்பி தந்துவிட்ட நிலையில், மீதி பணத்தை கேட்டு வந்துள்ளார் பிரகாஷ்.

வாக்குவாதம்
ஆனால் வனிதா தராமல் இழுத்தடித்து வந்துள்ளதாக தெரிகிறது.. இதில் இருவருக்கும் தகராறும், வாக்குவாதமும் இருந்து வந்தது.. மேலும் பணம் தராமல் ஏமாற்றியதால், பிரகாஷ் ஸ்டேஷனிலும் வனிதா மீது புகார் தந்துள்ளார். இது சம்பந்தமான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை பிரகாஷ், தன்னுடைய நண்பர் சூர்யா, காதலி மகேஷ்வரியுடன் சித்தி வனிதாவின் வீட்டுக்கு வந்தார்.. வழக்கம்போல் கனகராஜ் வீட்டில் உட்கார்ந்திருந்தார். 3 பிள்ளைகளும் தூங்கி கொண்டு இருந்தனர்.

எரிச்சல்
பணத்தை திருப்பி தரும்படி பிரகாஷ் கேட்கவும், அப்போது கனகராஜ் வனிதாவுக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார். இதனால், எரிச்சலான பிரகாஷ், "பண விஷயத்துல தலையிட நீ யாரு" என்று கேட்டுள்ளார். இதனால் கனகராஜ் இடையே தகராறு வெடித்தது. பிள்ளைகள் வீட்டுக்குள் திடீரென நுழைந்து சண்டை போட்ட கும்பலை கண்டு மிரண்டது.. 3 பிள்ளைகளுமே தன் அம்மாவை சண்டை போட வேண்டாம் என்று சொல்லியும், வனிதா தொடர்ந்து தன் அக்கா மகனுடன் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்.

ரத்த வெள்ளம்
இதில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரகாஷ் தரப்பு, மறைத்து வைத்திருந்த அரிவாளால், சித்தி வனிதா, கனகராஜை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது. பிள்ளைகள் கண் முன்னாடியே அம்மா வெட்டி சாய்க்கப்பட்டு, பிணமாக ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.. இப்போது போலீசார் தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications