’இளைய’ராஜா.. கோலாகல சதாபிஷேகம்! உற்சாகமாக பங்கேற்ற குடும்பத்தினர்! ஆனால் ’அவர்’ மட்டும் மிஸ்ஸிங்!
மயிலாடுதுறை : இசைஞானி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 80 வயதை தொட்டுள்ளதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Recommended Video
இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜா
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய சகோதரர்கள் ஆவார்கள்

சாதனைகள்
இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி. பிள்ளைகள் மூவருமே இசைத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இசைத்துறையில் இளையராஜாவுக்கு நாட்டின் உயரியவிருதுகளான பத்மவிபூஷன் மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன. இவர் இதுவரை இரண்டு தமிழ், இரண்டு தெலுங்கு, ஒரு மலையாளம் என மொத்தம் ஐந்து படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேச அரசின் பல விருதுகளையும், இரண்டு கெளரவ டாக்டர் பட்டங்களையும் வென்றுள்ளார் இளையராஜா.

சதாபிஷேக விழா
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜா 80 வயதை தொட்டுள்ளதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

குடும்பத்தினர் உற்சாகம்
இதனை முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. இசைஞானி இளையராஜாவுக்கு 80 வயது துவங்கியதை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி 85 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் பிரபல நடிகர் பிரேம்ஜி, உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இசைஞானி இளையராஜா கஜபூஜை, கோபூஜை செய்து யாகத்தில் பங்கேற்றார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications